சென்னை எழும்பூர் - இராமேஸ்வரம் தினசரி இரவு நேர ரயில் இயக்க வேண்டும் - தில்லைவிளாகம் இரயில் பயணிகள் நலச் சங்கத்தின் நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானம்
சென்னை எழும்பூர் - இராமேஸ்வரம் தினசரி இரவு நேர ரயில் இயக்க வேண்டும்  - தில்லைவிளாகம் இரயில் பயணிகள் நலச் சங்கத்தின் நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 

திருவாரூர் மாவட்டம் தில்லைவிளாகம் இரயில் பயணிகள் நலச் சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம் 23.12.2023 சனிக்கிழமை மாலை 5மணிக்கு சங்கத் தலைவர் ஜெ.தாஹிர் தலைமையிலும், துணைத் தலைவர் திரு.வி.சங்கரன் ஆலோசகர் திரு.T.G. ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. 19ஆம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் ஆதரவளித்த அனைவருக்கும் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. 

தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அவர்களை நேரில் சந்தித்து நம் கோரிக்கைகளை தெரிவிப்பதுஎன்றும்  நமது சங்கத்தை உடனடியாக பதிவு(Register) செய்வது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. 

பொருளாளராக சிறப்பாக பணியாற்றிய திரு.P.K.M.  அலாவுதீன் அவர்கள் கேட்டுக்கொண்டதைஏற்று அவர்களை விடுவித்து, புதிய பொருளாளராக திரு. S.குத்புதீன் அவர்களை தேர்வு செய்யப்பட்டது.

 ஆர்வமுள்ளவர்களை புதிய செயற்குழு உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவின்படி புதிய செயற்குழு உறுப்பினர்களாக A. தஸ்தகீர், P.K.S சேக் அலாவுதீன், தில்லை. இ.இராஜேந்திரன், தில்லை.M. முருகையன், D. குருநாதன், உப்பூர் V .வெங்கடாசலம், P.மகேஷ் குமார், K.P.M.சுலைமான் நாசர் ஆகியோர்கள் செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டனர். 

திருச்சி DRM அவர்களை சந்தித்து வந்த பின் நடவடிக்கைகள் எப்படி உள்ளது என்பதை பார்த்து அடுத்த கட்ட நகர்வு குறித்து அடுத்த கூட்டத்தில் முடிவு எடுப்பது என முடிவு செய்யப்பட்டது. 

இந்த கூட்டத்தில் செயலாளர் I.G. பழனிவேல், துணைச் செயலாளர் தனுஷ் பாண்டியன், பொருளாளர் S.குத்புதீன், செயற்குழு உறுப்பினர்கள் தில்லை M. ராஜேந்திரன்.N.S. தங்கராஜன்,R. ஆனந்த் ரெட்டி , P.K.S சேக் அலாவுதீன்,M. சாகுல் ஹமீது,D. குருநாதன், M.L.இப்ராஹிம் அலி P.மகேஷ் குமார் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

தீர்மானங்கள்

1. சென்னை எழும்பூர் இராமேஸ்வரம் தினசரி இரவு நேர விரைவு இரயிலை இருமுனைகளிலிருந்தும் திருவாரூர் திருத்துறைப்பூண்டி தில்லைவிளாகம் பட்டுக்கோட்டை காரைக்குடி வழியாக இயக்க வேண்டும் 

2. சென்னை எழும்பூரில் இருந்து மயிலாடுதுறை திருவாரூர் தில்லைவிளாகம் பட்டுக்கோட்டை காரைக்குடி வழியாக மதுரைக்கு பகல் நேர விரைவு இரயில் இயக்க வேண்டும் 

3.மயிலாடுதுறையில் இருந்து திருத்துறைப்பூண்டி தில்லைவிளாகம் பட்டுக்கோட்டை காரைக்குடி வழியாக மதுரைக்கு பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் 
 
திருவாரூர் காரைக்குடி பயணிகள் இரயிலை ஞாயிற்றுக்கிழமையும் இயக்க வேண்டும்

மீட்டர் கேஜ் காலத்தில் இயங்கியது போல் எதிர்திசையில் காரைக்குடியில் இருந்து மயிலாடுதுறைக்கு பயணிகள் இரயிலை இயக்க வேண்டும் .    

      மேலும் நம்முடைய ஐந்து தீர்மானங்களான அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் தில்லை விளாகம் ரயில் நிலையத்தில் நிற்க வேண்டும். தரமற்ற முறையில் போடப்பட்ட சாலையை அகற்றி உடனடியாக தரமான சாலை அமைக்க வேண்டும். தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ள சுற்றுச் சுவரை அகற்றிய உடனடியாக சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். ரயில் நிலையத்தில் வடக்கு பகுதியில் படிக்கட்டுகள் உடனடியாக அமைக்க வேண்டும். டிக்கெட் முன்பதிவு மையம் உடனடியாக திறக்க வேண்டும். என்ற ஐந்து தீர்மானங்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments