பொள்ளாச்சி ரெயில்
கோவை-பொள்ளாச்சி இடையே புதிய ரெயில் ேசவை தொடக்க விழா கோவை ரெயில் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. பி.ஆர்.நடராஜன் எம்.பி., சேலம் ரெயில்வே கோட்ட மேலளார் பங்கஜ்குமார் சின்கா தலைமை தாங்கினர். கூடுதல் கோட்ட மேலாளர் சிவலிங்கம் முன்னிலை வகித்தார். கோவை-பொள்ளாச்சி முன்பதிவில்லா ரெயிலை மத்திய மந்திரி எல்.முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நடப்பு நிதியாண்டில் ரெயில் நிலைய அபிவிருத்தி உள்பட பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி உள்ளது. தமிழகத்தில் ரெயில் நிலையங்களின் மேம்பாட்டிற்கு மட்டும் ரூ.1,866 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வடகோவை, மேட்டுப்பாளையம், ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களை மேம்படுத்த ரூ.60 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. கோவை ரெயில் நிலையத்தின் தரத்தை சர்வதேச அளவிற்கு உயர்த்த அம்ரித் பாரத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது.
30-ந் தேதி வந்தேபாரத் ெரயில்
கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயிலை வருகிற 30-ந் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். மத்திய அரசுடன் இணக்கமாக செல்வது தமிழக அரசிற்கு நல்லது. இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக கோவை மாவட்டம் காரமடையில், “நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்” யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எல்.முருகன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அங்கு சில இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். அவர்களுடன் கிரிக்கெட் விளையாடினார். இதில் மாவட்ட தலைவர் சங்கீதா, துணைத்தலைவர் விக்னேஷ், காரமடை மண்டல தலைவர் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இரு முக்கிய செய்தி :
1) தற்போது, பொள்ளாச்சியில் இருந்து காலை 7:25 மணிக்கு (ஞாயிறு தவிர வாரத்தின் 6 நாட்கள்) கோவைக்கு செல்லும் ரயில் வரும் திங்கள்கிழமை (25/12/2023) முதல் வாரத்தின் 7 நாட்களும் இயங்கும். அதுபோல, கோவையில் இருந்து மாலை 6:40 மணிக்கு (சனிக்கிழமை தவிர வாரத்தின் 6 நாட்கள்) செல்லும் ரயில் திங்கள்கிழமை (25/12/2023) முதல் வாரத்தின் 7 நாட்களும் இயங்கும்.
2) கோவை - பொள்ளாச்சி இடையே வாரத்தின் 7 நாட்களும் புதிய ரயில் இயக்கப்படுகிறது. கோவையில் இருந்து காலை 5:20 க்கு கிளம்பி பொள்ளாச்சிக்கு காலை 6:25 க்கு வந்து அடைகிறது. மன்னார்குடி - கோவை ரயிலின் பெட்டிகளை கொண்டு இந்த ரயில் இயக்கப்படுவதால் தமிழக டெல்டா பகுதியில் (மன்னார்குடி, தஞ்சாவூர்), திருச்சி, கரூர், ஈரோடு, திருப்பூரில் இருந்து பொள்ளாச்சிக்கு நேரடியாக (கோவை - பொள்ளாச்சி இடையே முன்பதிவு இல்லை) வந்து அடையலாம். பொள்ளாச்சியில் இருந்து இரவு 8:55 க்கு கிளம்பி கோவைக்கு இரவு 10:15 க்கு புதிய ரயில் சேருகிறது.
குறிப்பு : கோவை, போத்தனூர், கிணத்துக்கடவு மக்களுக்கு பொள்ளாச்சியில் காலை திருச்செந்தூர் ரயிலை பிடிக்க மற்றும் திருசெந்தூரில் இருந்து ரயிலில் இரவு பொள்ளாச்சி வந்து கோவை நோக்கி செல்ல இந்த புதிய ரயில் இணைப்பு ரயிலாகும். பொள்ளாச்சி, கிணத்துக்கடவு மக்கள் கோவையிலிருந்து இரவு கிளம்பும் சேரன், நீலகிரி, பெங்களூர், முதலிய ரயில்களை பிடிக்கவும் இந்த புதிய ரயில் வசதியாக இருக்கும். மறு மார்க்கத்தில் வெளியூர்களிலில் இருந்து கோவைக்கு காலை 5:20 முன்பு வருபவர்கள் புதிய கோவை - பொள்ளாச்சி ரயிலில் பயணம் மேற்கொள்ளலாம்.
கோவை-பொள்ளாச்சி இடையே கூடுதலாக ஒரு ரயில்! 3 ரயில்கள் ஒருங்கிணைப்பு! திருச்செந்தூர் செல்ல பக்தர்களுக்கு நல்ல வாய்ப்பு!
கோவையிலிருந்து மன்னார்குடிக்கும், அங்கிருந்து இங்கும், செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் இரு வழிகளில் இயக்கப்படுகிறது. அதேபோன்று, இங்கிருந்து நாகர்கோவிலுக்கு திருப்பூர்-ஈரோடு-கரூர்-திண்டுக்கல் வழித்தடத்தில் இரு வழிகளிலும், கோவை-பொள்ளாச்சி இடையே மற்றொரு ரயில் ஒன்றும், இரு வழிகளில் இயக்கப்பட்டு வந்தது.
இப்போது இந்த மூன்று ரயில்களையும் ஒருங்கிணைத்து இயக்கவிருப்பதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பாலக்காட்டிலிருந்து திருச்செந்தூர் செல்லும் ரயிலில், கோவையிலிருந்து பயணிகள் சென்று ஏறிக் கொள்ளும் வகையில், புதிதாக ஒரு இணைப்பு ரயில் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கு கூடுதலாக ஒரு ரயில் சேவை (காலை 5:20 மணி) கிடைக்கவுள்ளது.
மன்னார்குடியிலிருந்து கோவைக்கு காலை 4:45 மணிக்கு செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் வருகிறது. அந்த ரயில், காலை 5:20க்கு கோவையிலிருந்து புறப்பட்டு, காலை 6:25க்கு பொள்ளாச்சி செல்லும். அங்கிருந்து 7:25க்குப் புறப்பட்டு, காலை 8:45 மணிக்கு கோவையை வந்தடையும். இந்த ரயில், இரவு 7:30 மணிக்கு கோவையில் கிளம்பி, திருப்பூர்-ஈரோடு-கரூர் வழியாக நாகர்கோவில் செல்கிறது.
அங்கிருந்து கிளம்பி வரும் ரயில், கோவைக்கு காலை 7:45 மணிக்கு வருகிறது. அந்த ரயில், மாலை 6:40 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டு இரவு 8:00 மணிக்கு பொள்ளாச்சி செல்கிறது. அங்கிருந்து இரவு 8:55 மணிக்கு கிளம்பி, இரவு 10:00 மணிக்கு கோவை வருகிறது. அந்த ரயில், இரவு 12:00 மணிக்கு மேல் கோவையிலிருந்து கிளம்பி செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலாக, மன்னார்குடி செல்லும்.
கோவையிலிருந்து காலை 5:20 மணிக்கு செல்லும் ரயில், பொள்ளாச்சிக்கு 6:25க்குச் செல்கிறது. அதில் சென்றால், பொள்ளாச்சிக்கு 7:05க்கு வந்து 7:10க்குப் புறப்படும் பாலக்காடு- திருச்செந்துார் ரயிலில் ஏறி திருச்செந்துார் செல்லலாம். திரும்பும்போது, இந்த ரயில் பொள்ளாச்சிக்கு இரவு 8:00 மணிக்கு வருகிறது. அதில் வந்து, இரவு 8:55 மணிக்கு, பொள்ளாச்சியிலிருந்து புறப்படும் ரயிலில் ஏறி இரவு 10:00 மணிக்கு கோவை வந்து விடலாம்.
கோவையிலிருந்து திருச்செந்தூருக்குச் செல்வதற்கு, ரயில் இயக்க வேண்டு மென்ற கோரிக்கையை நேரடியாக ஏற்காமல், இணைப்பு ரயில் தருவதற்காக, மூன்று ரயில்களை ஒருங்கிணைத்து இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.