மார்கழி மாத பட்டத்தில் நிலக்கடலை, எள், உளுந்து பயிர்களை சாகுபடி செய்யலாம் வேளாண்மை அதிகாரிகள் தகவல்




மார்கழி மாத பட்டத்தில் நிலக்கடலை, எள், உளுந்து பயிர்களை சாகுபடி செய்யலாம் என வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடகிழக்கு பருவ மழை

புதுக்கோட்டை மாவட்டம் வானம் பார்த்த பூமியாக இருப்பதால் பருவ மழையை நம்பி விவசாயம் நடைபெறுகிறது. புதுக்கோட்டையில் ஆண்டு சராசரி மழையளவு 807.10 மில்லி மீட்டர் ஆகும். 2023-ம் ஆண்டு டிசம்பர் 19-ந் தேதி வரையில் 817.57 மில்லி மீட்டர் மழையளவு பெய்துள்ளது. வடகிழக்கு பருவ மழை (அக்டோபர், நவம்பர், டிசம்பர்) காலத்தில் இயல்பான மழையளவான 371.60 மில்லி மீட்டருக்கு பதிலாக இதுவரையில் 295.92 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இது 19.8 சதவீதம் மழை குறைவாக பெறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாவட்டத்தில் இந்த ஆண்டில் கடந்த நவம்பர் மாதம் வரை நெல் 90,558 எக்டேர் பரப்பளவிலும், சிறுதானியங்கள் 1,890 எக்டேர் பரப்பளவிலும், பயறுவகை பயிர்கள் 1,552 எக்டேர் பரப்பளவிலும், எண்ணெய்வித்து 4,491 எக்டேர் பரப்பளவிலும், கரும்பு 1,554 எக்டேர் பரப்பளவிலும், பருத்தி 19 எக்டேர் பரப்பளவிலும், தென்னை 13,109 எக்டேர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

உரங்கள் இருப்பு

இந்த நிலையில் தற்போது மார்கழி மாதத்தில் குறைந்த அளவு நீர் தேவைப்படும் நிலக்கடலை, எள், உளுந்து ஆகிய பயிர்களை தேர்வு செய்து சாகுபடி செய்யலாம் என வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் விவசாயத்திற்கு உரங்கள் போதுமான அளவில் குடோன்கள், கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகள் பெற்று பயன்பெறுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments