.அதிராம்பட்டினம் : சாலை விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்த சோகம்



 


தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் பி.காம் 3வது ஆண்டு படித்து வரும் மாணவர் முஹம்மது ஃபவாஸ். வயது 19. அதிரை நெசவுத்தெரு மர்ஹூம் யூசுப் ஹஜ்ரத் அவர்களின் பேரனான இவர் இன்று டிசம்பர் ‌24 ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 11 மணியளவில் காதர் முஹைதீன் பள்ளி அருகே செல்லும் சாலையோரம் பைக்கில் நின்றுகொண்டு இருந்ததாகவும், அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியதில் அவர் கீழே விழுந்து தலையில் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

உடனடியாக அவரை மீட்டு தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிர் பிரிந்தது. இது குறித்து விபத்து நேர்ந்த இடத்துக்கு வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

 19 வயது இளைஞர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிரை மக்களை அதிர்ச்சியடைய வைத்து இருக்கிறது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments