கோபாலப்பட்டிணம்‌ மீமிசல் பகுதியில் பனிப்பொழிவு ஏற்பட்டது.




சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு  வெளியிட்டுள்ள அறிக்கையில்
 
இந்திய பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது.


கார்த்திகை, மார்கழி மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பது வழக்கம்.

 இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் மீமிசல்  கோபாலப்பட்டிணத்தில் நான்கு நாட்களில் முன்பாக தொடர்ந்து மிதமான மழை பெய்தது  கடந்த சில நாட்களாக  காலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படுகின்றது காலையில் விடிந்த பிறகும் இருள் சூழ்ந்தே இருந்தது.

பனி மூட்டம் காரணமாக கடும் குளிர் நிலவியது. குளிரை தாங்க முடியாமல் முதியவர்களும், குழந்தைகளும் அவதிப்படுகின்றனர்.

காலை 7 அல்லது 8 மணிக்கு பிறகு மெல்ல மெல்ல பனி விலகி சூரிய ஒளி தென்பட்டது. அதன்பின்னர் வெயில் சுட்டெரித்தது












எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments