`கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உடைந்த குடிநீர்க் குழாயைச் சரி செய்யுங்க!'- விடிவு காலம் பிறப்பது எப்பொழுது குமுறும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்.!



குடிநீர் தேவை, தண்ணீர் சிக்கனம் அவசியம் குறித்தும் பள்ளியில் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆனால், பள்ளி வளாகத்திற்குள் தண்ணீர்க் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிக்கொண்டிருக்கிறது.



கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீரை வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார். 
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் உள்ள கோபாலப்பட்டிணம் கிராமத்தில் வசிக்கக்கூடிய மக்களுக்கு அரசு  மேல்நிலை பள்ளி அருகில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து குழாய் வழியாக தண்ணீர் செல்கிறது. இந்நிலையில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் தண்ணீர் வீணவது மட்டுமல்லாமல் வெளியேறி தேங்கி நிற்கும் நீரால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். 
இதுகுறித்து பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முகமது யூசுப் கூறுகையில், குழாய் உடைந்து தண்ணீர் வெளியாவதால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் பலமுறை ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் சரி செய்ய ஊராட்சி மன்ற நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் விடிவு காலம் பிறப்பது எப்பொழுது என்று புலம்பினார்.
எனவே உடைப்பு ஏற்பட்டிருக்கும் குழாயை உடனடியாக சரி செய்ய வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த சில மாதத்திற்கு முன்பு தான் உடைப்பு ஏற்பட்டிருந்த இந்த குழாய் சரி செய்யப்பட்ட நிலையில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவது மட்டுமில்லாது தேங்கி நிற்கும் நீரால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

புகைப்பட உதவி: முகமது யூசுப், GPM பொதுநல சேவை மையம், கோபாலப்பட்டிணம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments