அதிராம்பட்டினத்தில் மினி மாரத்தான்
பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினத்தில் மினி மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் நகராட்சியில் அமைந்துள்ள இமாம் ஷாபி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் 50-ஆவது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி மற்றும் வாக்கத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மாரத்தான் போட்டிக்கு 10 கிலோ மீட்டா் தூரம் நிா்ணயம் செய்யப்பட்டும், வாக்கத்தான் போட்டிக்கு 5 கிலோமீட்டா் தூரம் நிா்ணயம் செய்யப்பட்டிருந்தது. 20 வயதுக்கு உட்பட்டோா் பிரிவு, 44 வயதுக்குட்பட்டோா் பிரிவு என மாரத்தான் போட்டிக்கு வயது வரையறை செய்யப்பட்டிருந்தது. வாக்கத்தான் போட்டிக்கு 45-க்கும் மேல் வயது வரம்பு செய்தும் போட்டிகள் நடைபெற்றன.

இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவா்களுக்கு ரூ.10 ஆயிரம், ரூ. 6 ஆயிரம், ரூ. 4 ஆயிரம் என பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மேலும் இதுதவிர சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments