மீமிசல் அருகே ஆர்.புதுப்பட்டினத்தில அல்-அமீன் இஸ்லாமிய இளைஞர் பேரவை சார்பாக தர்பியா (எ) நல்லொழுக்க பயிற்சி முகாம்
மீமிசல் அருகே ஆர்.புதுப்பட்டினத்தில் அல்-அமீன் இஸ்லாமிய இளைஞர் பேரவை சார்பாக  தர்பியா (எ) நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே ஆர்.புதுப்பட்டிணத்தில் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக 1/1/2024 திங்கட்கிழமை  நல்லொழுக்க பயிற்சி முகாம் அல் மஸ்ஜிதுல் தக்வா‌ பள்ளியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நூர்‌ முஹம்மது அவர்கள் (மாவட்ட இஸ்லாமிய பிரச்சார பேரவை அணி தமுமுக) அவர்கள் கிராத் ஓதி ஆரம்பம் செய்தார்கள்.

சகோதரர் O.M.S. நூர்‌ முஹம்மது (அல் அமீன் ஆலோசனைக் குழு உறுப்பினர்) அவர்கள்  வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.

சகோதரர் ஹுசைன் மன்பயீ அவர்கள் (தலைமை செயற்குழு உறுப்பினர் தமுமுக) கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

சகோதரர்  வழக்கறிஞர் ஷேக் தாவூதியின் ( அல் அமீன் ஆலோசனை குழு உறுப்பினர்) அவர்கள் நன்றி உரை கூறினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ஜமாத்தார்கள் இளைஞர்கள் என 80 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments