அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு மாணவர்களுக்கு 3-ம் பருவ பாடப்புத்தகங்கள் வினியோகம்




அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. மாணவர்களுக்கு 3-ம் பருவ பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டன.

பள்ளிகள் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு கடந்த டிசம்பர் மாதம் 13-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து கடந்த 23-ந் தேதி முதல் விடுமுறை விடப்பட்டன. இந்த விடுமுறை நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.

இந்த நிலையில் விடுமுறைக்கு பின் நேற்று முதல் பள்ளிகள் வழக்கம் போல திறக்கப்பட்டன. மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வருகை தந்தனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 7-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு 3-ம் பருவத்திற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. மாணவர்கள் புத்தகங்களை ஆர்வமுடன் வாங்கினர்.

முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு

இந்த நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டதை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மஞ்சுளா ஆய்வு மேற்கொண்டார். கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டதை அவர் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது அதிகாரிகள் உடன் இருந்தனர்.

அன்னவாசல்

இந்தநிலையில் அன்னவாசல் அருகே உள்ள புல்வயல் அரசு உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல், 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 3-ம் பருவத்திற்கான பாடப் புத்தகங்களை பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில் முருகன் வழங்கினார்.

இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments