கலெக்டர் ஆய்வின்போது நடவடிக்கை: மருத்துவமனை பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்




கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுத இருக்கின்ற மாணவர்களின் கல்வித்திறன் குறித்து மாவட்ட கலெக்டர் மொ்சிரம்யா ஆய்வு செய்தார். மேலும் வேளாண்மை துறையில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். கோவிலூரில் உள்ள குழந்தைகள் மையத்தை ஆய்வு செய்து குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிட்டு ஆய்வு செய்தார். கோமாபுரத்தில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும் கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் உள்ள பதிவேடுகளை ஆய்வு செய்தும் மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கண்டார். மருத்துவமனை சுற்றுச்சுவரின் அருகில் உள்ள தனி நபர்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டார் அதன்படி கோட்டாட்சியர் முருகேசன், வட்டாட்சியர் ராமசாமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் உள்ளிட்டோர் அந்தப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றினார்கள். இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments