அரணாக விளங்கும் அலையாத்திகாடுகள்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.இதனால் நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது. திருவாரூர் மாவட்ட எல்லையான முத்துப்பேட்டை முதல் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகில் உள்ள கீழத்தோட்டம் வரை கடற்கரையையொட்டி அலையாத்தி காடுகள் அரணாக அமைந்துள்ளது.
அலையாத்தி காடுகளால் கடலுக்கும், கடற்கரைப் பகுதி மக்களுக்கும் ஏராளமான நன்மைகள் உண்டு. கடலில் விழுகின்ற அலையாத்தி இலைகள் கடல்வாழ் உயிரினங்களுக்கு இறையாக பயன்படுகிறது. அதேபோல கடலில் ஏற்படும் புயல் மற்றும் சுனாமி உள்ளிட்ட பேரிடர்களிலிருந்து கடலோர மக்களை காக்கும் அரணாக விளங்கி வருகிறது.
வெளிநாட்டு பறவைகள்
அதிராம்பட்டினம் கடற்கரை பகுதியான தம்பிக்கோட்டை மறவக்காடு, கரிசக்காடு, முடுக்குக்காடு, கருங்குளம், அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் உள்ள அலையாத்தி காடுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு பறவைகள் வந்து செல்கின்றன. ஆண்டு தோறும் நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை குளிர்காலம் என்பதால் வெளிநாட்டு பறவைகள் அலையாத்திகாடுகளுக்கு வந்து செல்கின்றன. இந்த ஆண்டு ஜப்பான், மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், இந்தோனேசியா, மாலத்தீவு, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பூநாரை, கூளக்கிடா, செங்கால் நாரை, சாம்பல் நாரை, பாம்பு தாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், கருப்பு அரிவாள் மூக்கன், நீர்காகங்கள், உள்ளான் என பலவகை பறவைகள் அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள அலையாத்திகாடுகளுக்கு வந்து குவிந்து வருகிறது.
மழை பெய்தால் அதிக அளவில் வரும்
இந்த பறவைகள் இனப்பெருக்கம் செய்து இங்கேயே தங்கி கோடை காலம் தொடங்குவதற்கு முன்பு குஞ்சுகளுடன் மீண்டும் தங்களது நாடுகளுக்கு சென்று விடும். கடந்த சில நாட்களாக அதிராம்பட்டினம் கடற்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் அலையாத்தி காடுகளில் தண்ணீர் நிரம்பி உள்ள நீர்நிலைகளில் பறவைகள் இறைதேடி வருவதை பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
இதுவரை வன ஆர்வலர்கள் கூறுகையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை சரிவர பெய்யாததால் வெளி நாட்டுப்பறவைகள் வருகை குறைந்து காணப்பட்டது. தற்போது கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் அலையாத்திகாடுகளுக்கு பறவைகள் குவிய தொடங்கி வருகின்றன். இதேபோல் மழை தொடர்ந்து பெய்தால் பறவைகள் அதிக அளவில் வரும் என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.