அறந்தாங்கி ரெயில் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா




அறந்தாங்கி கோட்ட ரெயில் மற்றும் சாலை உபயோகிப்பாளர்கள் சங்கம் சார்பாக அறந்தாங்கி வர்த்தக சங்கத்தலைவரும், கோட்ட ரெயில் மற்றும் சாலை உபயோகிப்பாளர்கள் சங்க தலைவரும், தமிழ்நாடு அரசு வணிக நலவாரிய உறுப்பினருமான எஸ்.காமராஜ் தலைமையில் 1½ ஏக்கர் பரப்பளவில் ரெயில் நிலையம் முன்புறம் வேலி அமைத்து மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதனை அறந்தாங்கி நகர்மன்ற தலைவர் இரா.ஆனந்த் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அறந்தாங்கி வர்த்தக சங்க முன்னாள் தலைவர்கள் ராஜ்குமார், சந்திரமோகன், அறந்தாங்கி வர்த்தக சங்க செயலாளர் தவசுமணி, பொருளாளர் அப்துல்லா மற்றும் நகர்மன்ற உறுப்பினர் விஸ்வமூர்த்தி, ரெயில் நிலைய ஆலோசனை கமிட்டி உறுப்பினர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள், அறந்தாங்கி கோட்ட ரெயில் மற்றும் சாலை உபயோகிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், வணிகர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments