ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" திட்டத்தை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் S.T இராமச்சந்திரன் M.L.A தொடங்கி வைத்தார்.
 பள்ளிக்கல்வித் துறை சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற சிறப்பு திட்டம் மூலம் 08-01-2024 முதல் 10-01-2024 வரை .தூய்மைப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் , முன்னாள் மாணவர்களைக் கொண்டு தூய்மைப் பணி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டமானது சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினை நமது அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு  ST.இராமச்சந்திரன் அவர்கள் துவக்கிவைத்தார்கள். 

மேலும் 2021-2022 ஆம் நிதியாண்டில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து  ₹18.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒரு வகுப்பறை கட்டடத்தையும் திறந்து வைத்தார்.

 மேல்நிலையில் பயிலும் ஒரு மாணவரையும் ஒரு மாணவியையும  திறப்புவிழாவிற்கான  நாடாவை(ரிப்பன்) வெட்ட வைத்து வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்பித்தார்கள்.

 இந்நிகழ்வில் பள்ளித் தலைமையாசிரியர் மதிப்புமிகு தாமரைச்செல்வன், உதவிதலைமை ஆசிரியர் ஸ்டாலின், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் குமார் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர் பெருமக்கள், பள்ளி துணை ஆய்வாளர் இளையராஜா, கூடலூர் முத்து, பாண்டியன், சிவ கிருபாகரன் ராஜமாணிக்கம், பள்ளி மேலாண்மை குழு தலைவி கவிதா உள்ளிட்டோர்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments