கோபாலப்பட்டிணத்தில் பொங்கலுக்கான பொருட்கள் வினியோகம்
கோபாலப்பட்டிணத்தில் பொங்கலுக்கான பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் பணமும் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

பொங்கல் திருநாளையொட்டி அரிசி குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசாக தலா ஒரு கிலோ பச்சரிசி, சா்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், தகுதியுள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடை ஊழியா்கள் வீடு வீடாகச் சென்று, குடும்ப அட்டைதாரா்களிடம் டோக்கன் விநியோகம் செய்து வருகிறார்கள்.

ஒவ்வொரு குடும்ப அட்டைதாரா்களுக்கும் அவா்கள் வசிக்கும் தெருவின் அடிப்படையில், குறிப்பிட்ட தேதியில், நியாயவிலைக் கடைக்கு வந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளும் வகையில் டோக்கன் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

ஜன.9-ஆம் தேதி வரை டோக்கன் விநியோகிக்கப்படவுள்ளது. இதைத் தொடா்ந்து ஜன.10 முதல் 14-ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

டோக்கன் பெறாத குடும்ப அட்டைதாரா்கள் ஜன.14-ஆம் தேதி பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் பொங்கல் திருநாளுக்குள் அனைத்துக் குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
 
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் இன்று 10.01.2024 புதன்கிழமை இரண்டு ரேஷன் கடைகளிலும் பொங்கலுக்கான பொருட்கள், பணம், வேட்டி, சேலை டோக்கன் அடிப்படையில் வழங்கப்படுகின்றது. மக்கள் வரிசையாக வாங்கி சென்றனர்.

இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள், ஊராட்சி நிர்வாகிகள், ரேஷன் கடை ஊழியர்கள், கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments