மணமேல்குடி ஒன்றியம் மேலஸ்தானம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எங்கள் பள்ளி மிளிரும்பள்ளி தூய்மை பணி
பள்ளிக்கல்வித் துறையின் கீழ் சிறப்பு செயல்பாடாக ஜனவரி மாதத்தில் எட்டாம் தேதி முதல் 10ஆம் தேதி வரை சிறப்பு பள்ளி செயல்பாடுகள் மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டது.
மேலஸ்தானம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் தன் சுத்தம்,  பள்ளி வளாகத் தூய்மை, பள்ளியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பெறுதல், கழிவு மேலாண்மை முறைகளை அறிந்து கொள்ளுதல், மறு சுழற்சி முறைகளின் முக்கியத்துவத்தினை உணர்தல், நெகிழி பயன்பாட்டை குறைத்து இயற்கைக்கு உகந்த மாற்றுப் பொருட்களை பயன்படுத்துதல் போன்ற ஊக்கமூட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் அதேபோல் பள்ளியின் வளாகத்தில் காய்கறி தோட்டம் அமைத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வகையில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற திட்டத்தின் கீழ் தூய்மைப் பணிகள் செயல்படுத்தப்பட்டது.  இந்நிகழ்வில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் பள்ளியின் தலைமை ஆசிரியர் வாசுகி மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments