சிவில் விவகாரங்களில் தலையிட்டால் கடும் நடவடிக்கை போலீசாருக்கு, கூடுதல் டி.ஜி.பி. எச்சரிக்கை




சிவில் விவகாரங்களில் தலையிடும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் டி.ஜி.பி. தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அருண் தமிழக போலீசாருக்கு பொதுவான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

தலையிடக்கூடாது

பணம், சொத்து, பாதை தகராறு போன்ற சிவில் பிரச்சினை தொடர்பான மனுக்கள் மீது காவல்துறை அதிகாரிகள் சிலர் முக்கியத்துவம் கொடுத்து விசாரித்து வருவதாக தகவல்கள் வந்துள்ளது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படும் விவகாரங்கள் தவிர மற்ற பொதுவான சிவில் விவகாரங்களில் போலீசார் தலையிடக்கூடாது, என்று அறிவுறுத்தப்படுகிறது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கருதப்படும் விவகாரங்களில் உயர் அதிகாரிகள் அனுமதி பெற்று உரிய நடவடிக்கை எடுக்கலாம்.

கடும் நடவடிக்கை

இதை மீறி பொதுவான சிவில் விவகாரங்களில் தலையிடும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு சுற்றறிக்கையில், கூடுதல் டி.ஜி.பி. அருண் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments