பாசிப்பட்டினத்தில், ரூ.7 லட்சத்தில் புதிய நிழற்குடை நவாஸ்கனி எம்.பி‌. திறந்து வைத்தார்




திருவாடானை யூனியன் கலியநகரி ஊராட்சி பாசிப்பட்டினத்தில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனியின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் ரூ. 7 லட்சம் மதிப்பில் பயணிகளுக்காக புதிய நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. இந்த பஸ் நிறுத்த பயணிகள் நிழற்குடை திறப்பு விழா திருவாடானை யூனியன் தலைவர் முகமது முக்தார் தலைமையில் நடைபெற்றது. திருவாடானை தி.மு.க.தெற்கு ஒன்றிய செயலாளர் ஓடவயல் ராஜாராம் முன்னிலை வகித்தார். அனைவரையும் கலியநகரி ஊராட்சி மன்ற தலைவர் உம்மு சலீமா நூருல் அமீன் வரவேற்றார்.

விழாவில் புதிய நிழற்குடை கட்டிடத்தை ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி திறந்து வைத்து பேசினார். இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் கோட்டை ராஜ், ஒன்றிய கவுன்சிலர் சிவ சங்கீதா ராஜா ராம், தி.மு.க. தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர் அன்வர்சதாத், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி அமீர்கான், கலிய நகரி முன்னாள் ஊராட்சி தலைவர் அபூபக்கர், ஊராட்சி துணைத்தலைவர் ராமவள்ளி, தி.மு.க.தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ராவுத்தர், மாணவரணி அமைப்பாளர் ரமேஷ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை செயலாளர் அப்துல் ஜப்பார், திருவாடானை ஒன்றிய செயலாளர் ராவுத்தர் நைனா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கதியதுல்லாஹ், ராமநாதபுரம் நகர தலைவர் காசிம் பாசி பட்டினம் ஜமாத்தார்கள், வன்னியர் படையாட்சி சமூகத்தினர் சுற்றுவட்டார கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments