திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை, பொன்மலை பாலம் பழுது - போக்குவரத்து மாற்றம்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை, பொன்மலை இரயில்வே பாலம் பழுதடைந்துள்ளபடியால், கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


1) மதுரை, திண்டுக்கல் மற்றும் தென் மாவட்டங்களிலிருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் கனரக வாகனங்கள் திண்டுக்கல், வையம்பட்டி, மணப்பாறை, குளித்தலை, முசிறி, துறையூர், பெரம்பலூர் வழியாக செல்ல வேண்டும். 

2) சென்னை, பெரம்பலூர் மார்க்கத்திலிருந்து திண்டுக்கல், மதுரை மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் பெரம்பலூரிலிருந்து துறையூர், முசிறி, குளித்தலை, மணப்பாறை, வையம்பட்டி, திண்டுக்கல் வழியாக செல்ல வேண்டும். 

 
3) சென்னை, பெரம்பலூர், அரியலூர் மார்க ;கத்திலிருந்து புதுக்கோட்டை வழியாக செல்லும் கனரக வாகனங்கள் பால்பண்ணை, துவாக்குடி, திருச்சி புதிய சுற்றுச்சாலை வழியாக சென்று வரவேண்டும். 

4) சேலம், நாமக்கல் மார்க்கத்திலிருந்து புதுக்கோட்டை செல்லும் கனரக வாகனங்கள் முசிறி, குளித்தலை, மணப்பாறை, விராலிமலை வழியாக சென்று வரவேண்டும். 

 
5) கோவை, கரூர் மார்க்கத்திலிருந்து புதுக்கோட்டை செல்லும் கனரக வாகனங்கள் குளித்தலை, மணப்பாறை, விராலிமலை வழியாக சென்று வரவேண்டும்.

6) அரியலூர் மார்க்கத்திலிருந்து மதுரை செல்லும் கனரக வாகனங்கள் நெ.1 டோல்கேட், முசிறி, குளித்தலை, மணப்பாறை, திண்டுக்கல் வழியாக சென்று வரவேண்டும். 

 
7) திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி, விராலிமலையிலிருந்து சென்னைக்கு செல்லும் கனரக வாகனங்கள் மணிகண்டம், வண்ணாங்கோயில், மணப்பாறை, குளித்தலை, முசிறி, துறையூர் பெரம்பலூர் வழியாக செல்ல வேண்டும். 

8) திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சாவூர் செல்லும் பயணிகள் பேருந்துகள் TVS டோல்கேட், ஏர்போர்ட், திருச்சி புதிய சுற்றுச்சாலை, துவாக்குடி வழியாக செல்ல வேண்டும். 

 
9) தஞ்சாவூரிலிருந்து திருச்சி வரும் பயணிகள் பேருந்துகள் வழக்கமாக வரும் பாதையான துவாக்குடி, திருவெறும்பூர், பால்பண்ணை வழியாக வரவேண்டும். 

10) மேலும் கூடுமான வரை அனைத்து வாகனங்களும் பொன்மலை இரயில்வே பாலம் வழியாக செல்வதை தவிர்க்குமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார், தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments