குறுக்கே வந்த மாடு தொண்டி அருகே P.V பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) பட்டுக்கோட்டையில் இருந்து ஏர்வாடி நோக்கி சென்ற அரசு பேருந்து மீது தொண்டியில் இருந்து S.P பட்டிணம் நோக்கி வந்த சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்து; 25 பேர் காயம்




ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்த பி.வி.பட்டினம் கிராமத்தின் அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில் நேற்று இரவு 7 மணி அளவில் பட்டுக்கோட்டையில் இருந்து ஏர்வாடி நோக்கி அரசு பஸ் ஒன்று 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பஸ்சை ராமநாதபுரம் கண்ணகி நகரைச் சேர்ந்த கண்ணன் (வயது 58) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.

அப்போது தொண்டியிலிருந்து மினி சரக்கு வாகனம் ஒன்று எஸ்.பி. பட்டினம் நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் மாடு குறுக்கே சென்றதால் சரக்கு வாகனத்தை ஓட்டிச் சென்ற டிரைவர் பொன்னரசு (23) மாட்டின் மீது மோதிவிடாமல் இருக்க பிரேக் பிடித்து உள்ளார்.. ஆனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் தாறுமாறாக ஓடி எதிரே வந்த அரசு பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 25 பேர் காயம் அடைந்தனர்.

தகவல் அறிந்த த.மு.மு.க. மற்றும் தொண்டி சமூக நல அறக்கட்டளை ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

சரக்கு வாகனத்தை ஓட்டி சென்ற டிரைவர் தொண்டி அருகே உள்ள வேலங்குடியைச் சேர்ந்த பொன்னரசுக்கு கால் முறிவு ஏற்பட்டது. அதேபோல் ராமேசுவரத்தைச் சேர்ந்த காமாட்சி(75) என்ற மூதாட்டிக்கு கால் முறிவு ஏற்பட்டது.அரசு பஸ் கண்டக்டரான ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் (52). நம்புதாளையைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (40) அவரது மனைவி கவுதமி (35), தொண்டியை சேர்ந்த சபா(15) உள்பட 25 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments