திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் ஆய்வு…




திருச்சியில் மத்திய மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் என இரண்டு பேருந்து நிலையங்கள் இருந்தாலும் போக்குவரத்து நெருக்கடியால் பேருந்துகள் சிக்கி திணறி வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு திருச்சி மாநகராட்சி சார்பில் பஞ்சப்பூரில் 40.60 ஏக்கரில் பிரமாண்ட ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ரூ.243.78 கோடியிலும் , கனரக சரக்கு வாகன முனையம் மற்றும் சாலைகள் , மழைநீர் வடிகால் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளும் பணி ரூ.106.20 கோடியிலும் என மொத்தம் ரூ.349.98 கோடி செலவில் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இந்நிலையில், கட்டுமான பணிகளை தமிழ்நாடுநகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கட்டுமானப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த அவர் அதுகுறித்த விவரங்களை மாநகராட்சி அலுவலர் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் கேட்டறிந்தார் . பணிகளை தரமாகவும் , விரைவாகவும் முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினார் .ஆய்வின்போது . நகரப்பொறியாளர் பி.சிவபாதம் , செயற்பொறியாளர் கே.எஸ்.பாலசுப்பிரமணியன் ,உதவி ஆணையர் ச.நா. சண்முகம், உதவி செயற்பொறியாளர் வேல்முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments