புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகி விட்டது. 114 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.
சம்பா நெல் சாகுபடி
புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவ மழையை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது. கிணற்றுப்பாசனம், ஆழ்குழாய் கிணறு, ஏரி, குளங்கள் மூலமாக பாசன வசதிகளில் பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். அந்த வகையில் சம்பா பருவத்தில் நெல் சாகுபடியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேற்கொண்டனர். இதில் மாவட்டம் முழுவதும் 2 லட்சத்து 2 ஆயிரத்து 401 ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
சம்பா பருவத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் தற்போது நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. ஒரு சில வயல்களில் தற்போது அறுவடையை தொடங்கி விட்டனர். பெரும்பாலும் தை மாதத்தில் அறுவடை நடைபெறுவது வழக்கம். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, உழவர் திருநாளில் அறுவடை நெற்கதிர்களை வைத்து விவசாயிகள் வழிபாடு நடத்துவது உண்டு. மேலும் கதிர் அடித்தலும் நெல் மணிகளை எடுத்து வைப்பார்கள்.
கொள்முதல் நிலையங்கள்
இந்த நிலையில் மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடை தொடங்குகிற நிலையில் விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடியாக நெல்லை கொள்முதல் செய்ய வழக்கம் போல திட்டமிட்டுள்ளது. இதற்காக 114 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஊழியர்களும் நியமிக்கப்பட்டு விட்டனர். பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்ததும் நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கும்.
விவசாயிகளும் பண்டிகையை முடித்த பின்னர் தான் முழுவதுமாக அறுவடையை தொடங்குவார்கள். அதன்பின் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பார்கள். நெல் அறுவடை தொடங்குவதையொட்டி தனியார் நெல் அறுவடை எந்திரங்களும் புதுக்கோட்டைக்கு வரத்தொடங்கி உள்ளன. விவசாயிகளும் எந்திரங்களுக்கு முன்பதிவு செய்து வருகின்றனர். ஒரு சில வயல்களில் கூலித்தொழிலாளர்கள் மூலம் அறுவடை மேற்கொள்கின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.