கொச்சியில் இருந்து திருச்சி, திருப்பதிக்கு புதிய விமான சேவை
கேரள மாநிலம் கொச்சி யில் இருந்து கண்ணுார், மைசூரு, திருச்சி, திருப்பதிக்கு புதிய விமான சேவைகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இங்குள்ள கொச்சி விமான நிலையத்தை, கொச்சி சர்வதேச விமான நிலைய நிறுவனம் நிர்வகிக்கிறது. நம் நாட்டிலேயே, அரசும் - தனியாரும் இணைந்து நடத்தும் முதல் விமான நிலையம் இது.

இதன் தலைவராக, முதல்வர் பினராயி விஜயன் உள்ளார். இந்த விமான நிலையத்தில் இருந்து பல பகுதிகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கொச்சியிலிருந்து கண்ணுார், மைசூரு, திருச்சி, திருப்பதிக்கு புதிய விமான சேவையை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, 'அலையன்ஸ் ஏர்' நிறுவனத்துடன் பேசப்பட்டு வருகிறது. இம்மாத இறுதிக்குள் இந்த சேவைகள் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments