மீமிசல் காவல் நிலையத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல்!




மீமிசல் காவல் நிலையத்தில்  சமத்துவ பொங்கல் நடைபெற்றது 

பண்டிகை காலங்கள் என்றாலே காவல்துறை அதிகாரிகளுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். அதனால் அவர்களால் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளின் போது தங்களுடைய குடும்பங்களுடன் இணைந்து அவற்றைக் கொண்டாடுவது என்பது பெரும்பாலும் காவலர்களுக்கு முடியாததாக இருக்கும்.

இதனிடையே, துறை சார்ந்த அலுவலகங்களில் பொங்கல் பண்டிகைகளுக்கு  சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. 

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் காவல் நிலையத்தில் காவல்துறை அதிகாரிகள் ஒன்று கூடி பொங்கல் கொண்டாடிய நிகழ்வு நடந்துள்ளது.

அதாவது, மீமிசல் காவல் நிலயத்தில் பணி புரியும் அனைத்து காவலர்கள், ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் பெண் காவலர்கள் என அவனைவரும்  காவல் நிலையம் முன்பாக  (ஜன.15) பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.


மேலும், பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு காவல் நிலையத்தை வண்ண தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

இந்த விழாவில் காவல் நிலையத்திற்கு இடம் வழங்கிய காரியதரிசி  குடும்பத்தார்களுக்கு காவல் துறையினர் சார்பில் கெளரவிக்கப்பட்டது

நிகழ்ச்சியில் காரியதரிசி குடும்பத்தை சேர்ந்த S. அயூப் கான் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்கள். 

தகவல்:
பாதுஷா

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments