மீமிசல் அருகே கார்களில் கடத்திய 140 கிலோ கஞ்சா பறிமுதல்; 5 பேர் கைது தனிப்படை போலீசார் அதிரடி




மீமிசல் அருகே கார்களில் கடத்திய 140 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 5 பேரை கைது செய்தனர்.

140 கிலோ கஞ்சா பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் பாலக்குடியில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த 2 கார்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், 2 கார்களில் பண்டல் பண்டலாக பார்சல் இருந்துள்ளது. இதையடுத்து ேபாலீசார் பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான 140 கிேலா கஞ்சா மற்றும் 2 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

5 பேர் கைது

மேலும் கஞ்சா கடத்தி வந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 27) கஸ்தூரி ரங்கன் (25), தேவதாசன் (32), திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுஜித்குமார் (25) பழனிச்செல்வம் (38) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், ஆந்திராவில் இருந்து புதுக்கோட்டைக்கு கஞ்சா கடத்தி வந்ததாகவும், இங்கிருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்தி செல்ல இருந்ததாகவும் கூறினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட 5 பேரையும், ஆலங்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments