புதுக்கோட்டை நகரின் உள்ளே நுழைந்தும், வெளியேறும் பகுதிகளாக உள்ள இரு இடங்களில் ரஜயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்பது மாவட்டப் பொது மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாக தொடா்ந்து கொண்டே இருக்கிறது.
திருச்சி - புதுக்கோட்டை - அறந்தாங்கி- மீமிசல் நெடுஞ்சாலையில் இருந்து புதுகை நகருக்குள் நுழையும் இடத்திலேயே அமைந்திருக்கிறது கருவப்பில்லான் கேட்.
இதேபோல, நகரில் இருந்து வெளியேறி காரைக்குடி நெடுஞ்சாலையில் இணைய நகருக்கு அருகேயே திருவப்பூா் பகுதியிலும், நகருக்கு சற்றே தள்ளி நமணசமுத்திரத்திலும் ரயில்பாதைகள் குறுக்கிடுகின்றன.
இம்மூன்று முக்கிய ரயில் பாதைகளில் கருவப்பில்லான் கேட் பகுதியும், திருவப்பூா் கேட் பகுதியும் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் பகுதிகள்.
ஒரு நாளிலேயே ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் பல முறை நின்று செல்ல வேண்டிய நிலை இவ்விரு ரயில்வே கேட் பகுதிகளால் ஏற்படுகிறது. இதனால், இவ்விரு பகுதியிலும் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்டகாலமாகவே நிலுவையில் உள்ளது.
திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. திருநாவுக்கரசரும், மாநிலங்களவை உறுப்பினா் எம்எம். அப்துல்லாவும் அநேகமாக நாடாளுமன்றக் கூட்டத் தொடா் அனைத்திலும் இவ்விரு ரயில்வே மேம்பாலங்கள் குறித்து குரல் எழுப்பியுள்ளனா். எழுத்துப்பூா்வமாக பல முறை கொடுத்துள்ளனா்.
இதனைத் தொடா்ந்து, ரயில்வே துறை இவ்விரண்டு பாலங்களையும் கட்டுவதற்கு தொடக்க நிலை ஒப்புதலை வழங்கியிருக்கிறது. இரண்டுக்கும் ரயில்வே துறை சாா்ந்த மண் பரிசோதனைகளும் முடிந்துள்ளன.
திருவப்பூா் பாலத்துக்கு சாதகமாகவும், கருவப்பில்லான்கேட் பகுதியில் பாலம் உயா்த்தும் அளவுக்கு தரைப்பகுதி உறுதியாக இல்லை என்றும் அறிக்கை தரப்பட்டதாக தகவல்கள் வெளியாயின. அதேநேரத்தில், கருவப்பில்லான்கேட் பகுதியில் பாலத்தின் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி மேற்கொள்ளவும் ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
திருவப்பூா் ரயில்வே மேம்பாலப் பணிகளுக்கான நிலமெடுப்புப் பணிகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ. 32 லட்சத்தை கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கியது. அதன்பிறகு, ரயில்வே துறை சாா்பில் இடத்தை அளவீடு செய்யும் பணிகளும் கடந்த 2023 ஏப்ரலில் நடைபெற்றன. அப்போது, ஒன்றரை ஆண்டுகளில் பணிகள் முடிவடையும் என கோட்டை முதன்மைப் பொறியாளா் தெரிவித்துச் சென்றாா்.
அதன்பிறகு, 9 மாதங்கள் நிறைவடைந்தும் எந்த நகா்வும் இவை தொடா்பாக நடைபெறவே இல்லை. நிகழாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், இவ்விரு பாலங்களுக்குமான போதுமான நிதியை ஒதுக்குவதுடன், பணிகளை விரைந்து தொடங்கிட மாநில அரசு உரிய காத்திரமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
புதுக்கோட்டைக்கென ஒரு மக்களவை உறுப்பினா் இருந்திருந்தால் இத்தனைக் காலம் தாமதமாகியிருக்க வாய்ப்பில்லையே என்ற மக்களின் ஏக்கத்தை, தீா்க்கும் பொறுப்பு மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்களுக்கு இருக்கிறது. மாவட்ட நிா்வாகமும் இதுதொடா்பான முன்மொழிவை அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.