தமிழ்நாடு உள்ளே வரும் முதல் எக்ஸ்பிரஸ் வே.. திருச்சி - சென்னையை இணைக்கும் பிரம்மாண்ட திட்டம்.. செம




சென்னை-சேலம் எக்ஸ்பிரஸ் வே வழித்தட கட்டுமானம் சட்டச் சிக்கலில் சிக்கியுள்ள நிலையில், பாரத்மாலா பரியோஜனா இரண்டாம் கட்டத்தின் கீழ், சென்னை மற்றும் திருச்சியை இணைக்கும் இரண்டாவது எக்ஸ்பிரஸ் வழித்தடத்தை உருவாக்க தேசிய நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) சமீபத்தில் நாடு முழுவதும் சுமார் 6,747 கிமீ தூரத்திற்கு இரண்டாம் கட்டத்தின் கீழ் எக்ஸ்பிரஸ்வேகள், பொருளாதார வழித்தடங்கள் மற்றும் இடை-வழிச்சாலைகளை மேம்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கைகளைத் தயாரிப்பதற்காக ஆலோசகர்களை பணிக்கு அமர்த்தி உள்ளது.



அதில் தமிழ்நாட்டு திட்டங்களும் அடங்கும். இதற்காக நிலம் கையகப்படுத்தப்படும் அளவு ஆய்வுக்குப் பிறகே தெரியவரும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. சென்னை டூ திருச்சி 4 மணி நேரத்தில் செல்லும் விதமாக இந்த எக்ஸ்பிரஸ் வே அமைக்கப்படும்.

எக்ஸ்பிரஸ் வே: சென்னை பெங்களூரை இணைக்கும் எக்ஸ்பிரஸ் வே சாலை பணிகள் நடந்து வருகின்றன. இதே பாதைக்கு அருகே புல்லட் ரயில் கொண்டு வரப்பட உள்ளது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே சென்னை பெங்களூர் இடையே விரைவுச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சாலை வந்த பின் பெங்களூர் - சென்னை இடையிலான பயணம் அடியோடு மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக தற்போது சென்னை பெங்களூர் இடையே பயணம் செய்ய 7 மணி நேரம் ஆகிறது. இந்த விரைவுச்சாலை வரும் பட்சத்தில் போக்குவரத்து 4 மணி நேரமாக குறையும். இதனால் மக்கள் இன்னும் வேகமாக, எளிதாக பயணம் செய்ய முடியும்.


பாலங்கள்: சென்னை பெங்களூரை இணைக்கும் சாலையில் உள்ள உயர் மட்ட சாலைகளாக அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையேயான மேம்பாலப் பணி இந்த நிதியாண்டு இறுதிக்குள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஆண்டுக்கான வேலைத் திட்டத்தில் இந்த திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. ₹3,500 கோடி மதிப்பில் இந்த உயர்மட்ட சாலை அமைக்கப்பட உள்ளது. அதாவது 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையே ஒரே நீளமாக பாலம் அமைக்கப்படும். இந்த பகுதியை இப்போது கடக்க 30 நிமிடம் குறைந்தபட்சம் ஆகிறது. பாலம் கட்டப்பட்டால் 10 -15 நிமிடத்தில் இந்த பகுதியை கடக்கலாம்

இடை இடையே மக்கள் வெளியேற, உள்ளே வர இணைப்பு பாலங்கள் அமைக்கப்படும். 6 வழி சாலை கொண்ட மிக பிரம்மாண்ட பாலம் ஆகும். இதற்கான முழு ரிப்போர்ட் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. . இந்த சாலையில் சூப்பர் வீடியோ இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக வெளியாகி உள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.



அதன்பின் இதற்கான டெண்டர் விடப்படும். இந்த வருட இறுதிக்குள் இதற்கான பணிகள் தொடங்கும். சென்னை - பெங்களூர் செல்ல தற்போது பயன்படுத்தப்படும் ஹைவேஸின் மேல் இந்த பாலம் கட்டப்படும். நடுவில் ஒரு பில்லர் வைத்து மெட்ரோ பாணியில் இந்த பாலம் அமைக்கப்படும்.

இரண்டு கட்டங்களாக இந்த பாலம் அமைக்கப்படும். ஒன்று மதுரவாயலில் இருந்து சென்னை வெளிவட்ட சாலை வரை அமைக்கப்படும். மற்றொன்று அந்த இடத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை அமைக்கப்படும். இந்த புதிய பாலம் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடிக்கு முன்னால் நெடுஞ்சாலையில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தொழில்நுட்ப, பொருளாதார மற்றும் நிலம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வது உள்ளிட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. சென்னை-திருச்சி விரைவுச்சாலை 310 கி.மீ நீளமும், பிள்ளையார்பட்டி-தூத்துக்குடி வழித்தடம் 160 கி.மீ நீளமும் இருக்கும். இதை சேர்த்து மொத்தமாக 470 கிமீ தூரத்திற்கு எக்ஸ்பிரஸ் வே சாலை அமைக்கும் பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன.

ஏற்கனவே அங்கே அமைக்கப்பட்டு உள்ள 4 வழி சாலை பகுதியில் கூடுதல் நிலம் கையகப்படுத்தப்பட்டு அது 8 வழி சாலையாக மாற்றப்படும் என்று தகவல்கள் வருகின்றன. தற்போது இங்கே பயண நேரம் 5. 55 மணி நேரமாக உள்ளது. இது 4 மணி நேரத்திற்கு கீழ் குறையும் என்று கூறப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments