தமிழகத்தில் பனிப்பொழிவு மேலும் அதிகரிக்கும்.தீவிரமடைகிறது குளிர்கால பனி




பனிமூட்டமான காலை, பஞ்சுபோன்ற போர்வைகள், குளிர் காற்று என ரம்மியமாக காட்சியளிக்கிறது தமிழ்நாடு. எனவே மழை காலத்தை நாம் எந்தளவு ரசிக்கிறோமோ அதே அளவு குளிர்காலத்தையும் ரசிப்போம். 

வரும் நாட்களில் தமிழகத்தில் குளிரின் தாக்கம் எப்படி?  

வட இந்தியாவில் இருந்து வீசும் ஈரப்பதம் இல்லாத வறண்ட காற்றானது தமிழகம் வரை நீடிக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் குளிர்காலம் தீவிரமடைய உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை தென்காசி தேனி திண்டுக்கல் கோவை நீலகிரி சேலம் வேலூர் திருப்பத்தூர் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஜனவரி 17 ம்தேதி முதல் குளிரும் பனிப்பொழிவின் தாக்கமும் படிப்படியாக அதிகரிக்கும். 

மேற்கண்ட மாவட்டங்களில் குறைந்த பட்ச வெப்பநிலை 18°© கீழ் செல்லும். 
பொதுவாக தமிழகம் முழுவதும்  குளிரின் தாக்கம் மிக அதிகமாக இருந்தாலும் தென்காசி மேக்கரை மாஞ்சோலை கோதையாறு குமுளி தேக்கடி கொடைக்கானல் வால்பாறை ஊட்டி குன்னூர் ஏற்காடு சிறுமலை உள்ளிட்ட பல்வேறு மலை பகுதிகளிலும் குளிர் மேலும் அதிகமாக இருக்கும்.

கேரளாவை பொறுத்தவரை குளிரின் தாக்கம் அதிகமாக இருக்காது . தமிழ்நாட்டை ஒப்பிடும் போது கேரளாவில் பகல் நேர வெப்பநிலை கடுமையான அதிகரிக்கும் குறிப்பாக கேரளா கடலோர மாவட்டங்களில் வெப்பநிலையின் அளவு 35 °© க்கு மேல் செல்லும். 

தமிழ்நாட்டை பொறுத்தவரை பகல் நேர வெப்பநிலையும் குறைவாக இருக்கும். குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பகல் நேரத்திலே மிதமான வெயிலே காணப்படும். தென் கடலோர பகுதிகளை பொறுத்தவரை இராமேஷ்வரம் திருச்செந்தூர் ஆகிய இடங்களில்  பகல் நேர வெப்பநிலை வால்பாறையை போல மிக  குறைவாகவே இருக்கும். 

குளிர்காலத்தை பொதுமக்கள் எவ்வாறு கழிக்கலாம்? 

குளிர்காலத்தை பொறுத்தவரை குறுகிய பகல் நீண்ட இரவு அமைதியான வானிலை என நம் மனதை கொள்ளை கொள்கிறது தமிழகம். 
சூரிய ஒளியின் அரவணைப்பு மற்றும் ஆரோக்கிய நன்மைகளை நாம் அனைவரும் உணர வேண்டும். இது நம் உடலை மட்டுமல்ல, நம் மனம், இதயம் மற்றும் ஆன்மாவையும் அமைதிப்படுத்துகிறது. 
குளிர்காலத்தில் சன் பாத் நல்லது. சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆரோக்கியத்தை பராமரிக்க நல்லது.

விதவிதமான ஆடைகள் குளிர்காலத்தில் அணியலாம் சுவட்டர் குல்லா உள்ளிட்ட குளிர்காலத்திற்கு ஏற்ற ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள். இந்த சீசன் உங்கள் ஃபேஷன் அளவை அதிகரிக்கும் .மிக முக்கியமாக ஒரு கப் தேநீர் அருந்துங்கள். மேலும் நோய்களில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ளவும். நீங்கள் வசிக்கும் இடத்தில் பனிப்பொழிவு இல்லை என்றால், நீங்கள் அதை அனுபவிக்க ஒரு பயணம் சென்று விடுங்கள். செல்லும் போது ஸ்வெட்டார் குல்லா உள்ளிட்ட ஆடைகளையும் எடுத்து செல்ல மறவாதீர்கள். 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments