ஒரு காலத்தில் பணிகள் ஆரம்பித்து கைவிடப்பட்ட அறந்தாங்கி - திருமயம் ரயில் பாதை




ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவில் பல்வேறு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு பின்னர் பல்வேறு காரணங்களால் அகற்றபட்டுள்ளது. அவ்வாறு உருவாக்கப்படும் போதே நிறுத்தப்ப்டடு பின்னர் மறக்கப்பட்ட பாதை தான் அறந்தாங்கி - திருமயம் ரயில் பாதை . 31.12.1903 அன்று பட்டுக்கோட்டை - அறந்தாங்கி ரயில் பாதை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கப்பட்டது. அதை தொடர்ந்து அறந்தாங்கியிலிருந்து - திருமயம் வரை ரயில் பாதை அமைப்பது பின்னர் அதனை புதுக்கோட்டை வழியாக திருச்சி வரை நீட்டிப்பது என்ற திட்டத்தோடு புதுக்கோட்டை சமஸ்தானத்திடம் ஆங்கில அரசால் அனுமதிபெறப்பட்டது. 

அதனை தொடர்ந்து 1913ம் ஆண்டு அறந்தாங்கியிலிருந்து பணிகள் தொடங்கின. ஓராண்டுக்குள் முதல் உலகப்போர் தொடங்கியது .ஆயுத உற்பத்தி காரணமாக இரும்பு தட்டுப்பாடு ஏற்ப்பட்டது மேலும் ஆயுதங்கள் செய்ய இரும்பு தேவைப்பட்டதால் இந்தியாவில் இருந்த பல்வேறு  ரயில் பாதைகள் முடப்பட்டு தண்டவாளங்கள் பிரித்து இங்கிலாந்து அனுப்பட்டது. அதோடு அறந்தாங்கி - திருமயம் பாதையும்  பணிகள் பாதியிலையே நிறுத்தப்பட்டு தண்டவாளங்கள் இங்கிலாந்து சென்றது.சிவகங்கை - மானாமதுரை - இராமேஸ்வரம் பாதை தெற்கே இருந்தது அதனை இணைத்தால் திருச்சியிலிருந்து  புதுக்கோட்டை - காரைக்குடி-தேவகோட்டை போன்ற நகரங்களை இணைக்கலாம் அதோடு புதுக்கோட்டை மன்னர் திருச்சி காரைக்குடி பாதைக்கு புதுக்கோட்டை சமஸ்தானபகுதிக்கு அவர் நிதி வழங்குவதாக ஆங்கில அரசுடன் ஒப்பந்தம் செய்தார் , அதனால் அறந்தாங்கி - திருமயம் பாதை பணிகளை அப்படியே கைவிட்டது தெற்கு இந்தியன் ரயில்வே. இன்னும் இந்த பாதையின் எச்சங்கள் அந்த பகுதியில் ஆங்காங்கே இருக்கிறது. 

✓3 வது வரைபடத்தில் மஞ்சள் நிறத்தில் குறிப்பிடபட்டது அறந்தாங்கியிலிருந்து சென்ற பழைய திருமய ரயில் பாதை பகுதி

✓4வது வரைபடத்தில் மஞ்சள் நிறத்தில் குறிப்பிடபட்டது திருமயத்தில் இருந்து அறந்தாங்கி சென்ற பாதையின் பகுதி

✓5வது படத்தில் அறந்தாங்கி சாலையில் ரயில்வே கடவுப்பாதை (Railway gate) கட்டிடத்தின்  எச்சம்.






News Credit: Najib Akbar,Aruppukottai

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments