திருவாரூர் - காரைக்குடி வழித்தடத்தில் மீட்டர் கேஜ் காலத்தில் இயக்கப்பட "மனோரா எக்ஸ்பிரஸ்" ரயில் இயக்கப்பட்டது
தென்னிந்திய ரயில்வே கம்பெனி 1890 ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் இருந்து முத்துப்பேட்டை வரை மீட்டர் கேஜ் ரயில் பாதை அமைக்க திட்டமிட்டது. 02.04.1894 ந் தேதி மயிலாடுதுறையில் இருந்து முத்துப்பேட்டைக்கு மீட்டர் கேஜ் ரயில் பாதை அமைக்கப்பட்டது. 20.10.1902 ஆம் தேதி முத்துப்பேட்டையில் இருந்து பட்டுக்கோட்டை வரை ரயில் பாதை அமைக்கப்பட்டது. 31.12.1903 ஆம் தேதி பட்டுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி வரை வரையிலும் பின்னர் 29.3.1952 ஆம் தேதி அறந்தாங்கிலிருந்து காரைக்குடி வரையிலும் 187 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டது.
இந்த ரயில் பாதை அமைக்கப்பட்ட பிறகு சென்னை ராமேஸ்வரம் போட் மெயில் இருந்து 2 ரயில் பெட்டிகள் மயிலாடுதுறையில் பிரிக்கப்பட்டு மயிலாடுதுறை - காரைக்குடி பாஸ்ட் பாசஞ்சரில் இணைக்கப்பட்டு திருவாரூர் - பட்டுக்கோட்டை - முத்துப்பேட்டை - அதிராம்பட்டினம் - பேராவூரணி - அறந்தாங்கி வழியாக காரைக்குடி வரை ரயில் இயக்கப்பட்டது.
இந்த ரயில் பாதை அமைக்கப்பட்ட பிறகு சென்னை ராமேஸ்வரம் போட் மெயில் இருந்து 2 ரயில் பெட்டிகள் மயிலாடுதுறையில் பிரிக்கப்பட்டு மயிலாடுதுறை - காரைக்குடி பாஸ்ட் பாசஞ்சரில் இணைக்கப்பட்டு திருவாரூர் - பட்டுக்கோட்டை - முத்துப்பேட்டை - அதிராம்பட்டினம் - பேராவூரணி - அறந்தாங்கி வழியாக காரைக்குடி வரை ரயில் இயக்கப்பட்டது.
இந்த இரண்டு ரயில் பெட்டிகளில் இப்பகுதி மக்கள் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கு சென்று வந்தார்கள். 1980 ஆம் ஆண்டு போட் மெயில் இருந்து ஐந்து ரயில் பெட்டிகள் மயிலாடுதுறையில் பிரிக்கப்பட்டு மனோரா எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இணைப்பு ரயிலாக காரைக்குடி வரை படுக்கை வசதிகளுடன் இயக்கப்பட்டது.
பின்னர் 1987 ஆம் ஆண்டு மனோரா எக்ஸ்பிரஸ் கம்பன் எக்ஸ்பிரஸாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு சென்னையிலிருந்து காரைக்குடி வரை இயக்கப்பட்டது. இந்த ரயில் திருவாரூரில் நாகூர் ஆண்டவர் மற்றும் கம்பன் எக்ஸ்பிரஸ் என இரண்டு விரைவு ரயில்களாக பிரித்து இணைப்பு விரைவு இரயிலாக இயக்கப்பட்டது.
எனவே தென்னக ரயில்வே ராமேஸ்வரத்தில் இருந்து காரைக்குடி அறந்தாங்கி - பேராவூரணி - பட்டுக்கோட்டை - அதிராம்பட்டினம் - முத்துப்பேட்டை - திருத்துறைப்பூண்டி - திருவாரூர் - மயிலாடுதுறை - வழியாக தினசரி இரவு நேர ரயில்களை சென்னை எழும்பூருக்கு இயக்க வேண்டும்.
இப்பகுதியில் கிடைக்கும் உள்நாட்டு மற்றும் கடல் மீன்கள் தினசரி இந்த ரயில் வழியாக சென்னைக்கு அனுப்பப்பட்டது. அகல ரயில் பாதைகள் அமைக்கும் பணிகளுக்காக 2012 ஆம் ஆண்டு இப்பாதையில் சென்னைக்கான ரயில் சேவை நிறுத்தப்பட்டது. 2018 - 19 ஆம் ஆண்டு அகல ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்ட பின்பு தற்போது 01.06.2023 ந் தேதி முதல் தாம்பரம் - செங்கோட்டை - தாம்பரம் அதிவிரைவு ரயில் வாரம் மூன்று முறை மட்டும் இயக்கப்படுகிறது.
அதுபோல செகந்திராபாத் - இராமநாதபுரம் சிறப்பு விரைவு ரயில் வாரம் ஒரு முறை மட்டும் இயக்கப்படுகிறது. தாம்பரம் - செங்கோட்டை - தாம்பரம் விரைவு ரயில் தாம்பரம் வரை இயக்கப்படுவதால் இப்பகுதியில் இருந்து சென்னை எழும்பூர் பகுதிக்கு செல்லும் இரயில் பயணிகள் தாம்பரத்தில் இறங்கி புறநகர் ரயில்களில் ஏறி மாற வேண்டி இருக்கிறது.
அதற்கான பயண சீட்டுகளையும் தாம்பரத்தில் மீண்டும் எடுக்க வேண்டியுள்ளது. தாம்பரத்தில் மாடிப்படிகளில் ஏறி புறநகர் ரயில்களுக்கு செல்ல வேண்டி உள்ளதால் முதியோர், கர்ப்பிணி பெண்கள், மூட்டு வலி உள்ளவர்கள்,மாற்றுத்திறனாளிகள் அதிக சுமையுடன் செல்லும் பயணிகள் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர் .
எனவே தென்னக ரயில்வே ராமேஸ்வரத்தில் இருந்து காரைக்குடி அறந்தாங்கி - பேராவூரணி - பட்டுக்கோட்டை - அதிராம்பட்டினம் - முத்துப்பேட்டை - திருத்துறைப்பூண்டி - திருவாரூர் - மயிலாடுதுறை - வழியாக தினசரி இரவு இரவு நேர ரயில்களை சென்னை எழும்பூருக்கு இயக்க வேண்டும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.