மணமேல்குடி அரசு மருத்துவமனையின் அலட்சியத்தையும் அவலத்தையும் கண்டித்து நடக்கும் மக்கள் திரள் ஆர்பாட்டம் நடைபெறுகிறது
மாவட்ட நிர்வாகமே, சுகாதாரத்துறையே நடவடிக்கை எடு - கவனப்படுத்து
கவன ஈர்ப்பு பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்
நாள் : 21-01-2024
இடம் : அரசு மருத்துவமனை முன்பாக மணமேல்குடி
கோரிக்கைகள்
மணமேல்குடி அரசு மருத்துவமனை அடிமட்ட நிர்வாக சீர்கேட்டை கண்டித்து
மருத்துவர்- மருந்தாளுனர், செவிலியர்களின் தான்தோன்றி தனமான செயல்பாட்டை கண்டித்து
உயிர்காக்கும் மருந்துகள் இல்லை, அவசரகால உயிர் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் இல்லை.
போதிய மருத்துவர்கள் இல்லை, செவிலியர்கள், உதவியாளர்கள் இல்லாத அவல நிலையில் இயங்கி வரும் மருத்துவமனை நிர்வாகத்தினை உடன் கவனத்தில் கொண்டு முறையாக செயல்படுத்திட கோரியும்
செவிலியர்கள் மருத்துவராகவும், சுகாதார பணியாளர்கள் செவிலியர்களாகவும், மருந்தாளுர் மருத்துவமனைக்கு முதலீடு செய்தவரைப் போல செயல்படுவதை உடன் கவனத்தில் கொள்ள கோரியும்
முழு நேரமும், எந்தச் சூழ்நிலையிலும் உடன் மருத்துவர்கள் செவிலியர்கள் வருகையில் இருந்திட வலியுறுத்தியும்
தொடர் பதட்டத்தோட செயல்படும் மருத்துவமனையின் செயல்பாட்டை கண்காணிக்க, மக்கள் பிரதிநிதிகள் அனைத்து கட்சி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கவேண்டும்.
அம்மாபட்டிணம் 9 வயது சிறுவன், N.M.யூனுஸ் அவர்களின் மகன் அப்ஸர் என்பவருக்கு நாகப்பாம்பு கடித்ததில் மருத்துவமனையில் உடன் சேர்க்கப்பட்டு அங்கு மருத்துவர் இல்லாமல் தவறான சிகிச்சை அளித்து நீண்ட நேரத்திற்கு பிறகு வந்த மருத்துவர் அறந்தாங்கி செல்லுங்கள் என தட்டிக்கழித்து சிறுவனின் பரிதாப மரணத்திற்கு நிர்வாகம் பொறுப்பேற்று பணியில் இருந்த மருத்துவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என
கோரியும்
இனிமேலும் இப்படிப்பட்ட சூழ்நிலை எந்த ஒரு உயிருக்கும் நேர்ந்து விடக்கூடாது என
வலியுறுத்தி சுகாதாரதுறை கவனத்திற்கு கொண்டு செல்வதோடு நடந்த துயர சம்பத்திற்கு
நீதி கேட்டு கண்டன முழக்கம் எழுப்பிட பொதுமக்கள் கலந்துகொண்டு ஆதரவு தருமாறு
கேட்டுக்கொள்கிறோம்.
அழைப்பது....
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,
விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம்,
மணமேல்குடி ஒன்றியம், தொடர்புக்கு : 9483454938, 9443561180
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.