10 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்யும் ஊழியர்கள்… இன்ப அதிர்ச்சி கொடுத்த துணிக்கடை உரிமையாளர் ; குவியும் பாராட்டு!!
கள்ளக்குறிச்சியில் இயங்கி வரும் பிரபல துணிக்கடையில் பத்து வருடங்களுக்கு மேலாக பணி செய்து வரும் நபர்களுக்கு பைக் பரிசாக வழங்கிய கடை உரிமையாளர் செயலை பலர் பாராட்டி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சேலம் மெயின் ரோட்டில் உள்ள பிரபல துணிக்கடையான ஜேகேஆர் டெக்ஸ்டைல்ஸ் என்கின்ற கடையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விழாக்காலங்களில் இங்கு சில்லறையாகவும் மொத்த விற்பனையிலும் ஆடைகள் வழங்கி வருகின்றனர்.


இதில் பெரும்பாலான ஊழியர்கள் ஒன்று முதல் இரண்டு மூன்று வருடங்கள் மட்டுமே ஊழியர்கள் பணியாற்றி வேறு வேலைக்கு செல்வது வழக்கம். ஆனால் இந்த பிரபல துணிக்கடையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு பரிசு வழங்க வேண்டும் என கடையின் உரிமையாளர் நினைத்துள்ளார்.


இதனால், பொங்கல் பண்டிகையொட்டி இன்று தனது துணிக்கடையில் பத்து வருடங்களுக்கு மேலாக பணி செய்து வந்த நபர்களுக்கு இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்து உற்சாகமூட்டிய கடையின் உரிமையாளர் ரமேஷ் காந்தி, இவரின் செயலுக்கு பல்வேறு தரப்பினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments