தூத்துக்குடியிலிருந்து வேளாங்கண்ணிக்கு சென்றபோது பட்டுக்கோட்டை அருகே கார் சாலையோர தடுப்புச் சுவரில் மோதி 4 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர்.
தூத்துக்குடி இந்திரா நகரைச் சேர்ந்த பாக்யராஜ் மகன் மரியசெல்வராஜ் (37), இவரது மனைவி பத்மாமேரி(31). இவரது மகன் சந்தோஷ் செல்வம்(7), அதே பகுதியைச் சேர்ந்த் சண்முகத்தாய் (53), சரஸ்வதி (50), கணபதி (52), லதா (40), சின்ன பாண்டி (40), ராணி (40), ஞானம்மாள் (60), பாக்கியராஜ் (62) ஆகிய 11 பேரும் வேளாங்கண்ணி மாதா கோயிலில் சந்தோஷ் செல்வத்துக்கு மொட்டையடிக்க நேற்று இரவு ஊரில் இருந்து டவேரா காரில் புறப்பட்டனர்.
இந்நிலையில் இன்று (20-ம் தேதி) அதிகாலை 5 மணியளவில் தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மனேரா பகுதியில் கார் வந்துக்கொண்டு இருந்த போது கார் ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரின் முன்பக்கம் நொறுங்கியது. இதில், ராணி, சின்னபாண்டி, பாக்கியராஜ், ஞானம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயமடைந்த 7 பேரையும் 108 ஆம்புலென்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதையடுத்து இறந்தவர்களின் உடலை மீட்டு போலீஸார் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இவ்விபத்து குறித்து சேதுபாவாசத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவசத்திரம் காவல் நிலைய சரகம் மனோர அருகில் நான்கு சக்கர வாகன விபத்து தொடர்பாக
இன்று 20.01.24ஆம் தேதி அதிகாலை சுமார் 04.50 மணிக்கு தூத்துக்குடி மாவட்டம் மூணாவயல் கிராமத்திலிருந்து டவேரா TN45 AB 7788 என்ற நான்ங்குசக்கர வாகனத்தில் வேளாங்கண்ணிக்கு செல்லும் வழியில் தஞ்சாவூர் மாவட்டம் சேதுவாசத்திரம் காவல் நிலைய சரகம் மனோகரா அருகில் பாலக்கட்டையில் மோதி விபத்துக்குள்ளானதில் காயம் பட்டவர்கள். மற்றும் நான்கு பேர்கள் இறந்தது விட்டார்கள்.
1.மரிய செல்வராஜ் 37/24
த/பெ பாக்யராஜ்
திருவிக நகர்
இந்திரா நகர்
தூத்துக்குடி
2.பாத்திமா மேரி 31/24
க/பெ மரிய செல்வராஜ்
இடது கண் மேல் பகுதி மற்றும் கால்களில் சிராய்ப்பு காயம்
3. சந்தோஷ் செல்வம் 7/24
த/பெ மரிய செல்வராஜ்
வலது கணுக்காலில் காயம்
4. சரஸ்வதி 50/24
க/பெ போஸ்கோ
இடது கால்
5.கணபதி 52 சுயநினைவு இல்லை
6.லதா 40/24
க/பெ சேகர்
இடது கால்
7. சண்முகத்தாய் 53/24
த/பெ பாக்கியராஜ்
முகம் மற்றும் கால்களில் காயம்
இறந்தவர்கள்
1.பாக்கியராஜ் 62/24
த/பெ யாகப்பதேவர்
2. ஞானம்மாள் 60/24
க/பெ அந்தோணி
3. ராணி 40/24
க/பெ மாசாணம்
4. சின்னபாண்டி 40/24
த/பெ முருதையா
இறந்தவர்களின் உடல்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்ளது.
மேற்கண்ட காயம் பட்டவர்கள் அனைவரையும் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்ப உள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.