தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் வரை கடல் பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வை இந்திய அரசு மேற்கொள்ள திட்டம்




தமிழ்நாட்டின் தனுஷ்கோடியில் இருந்து இலங்கையின் தலைமன்னார் வரை 23 கி.மீ. கடல் பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வை இந்திய அரசு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை இரு நாடுகளிடையே பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்தியா – இலங்கை இடையே ரயில் மற்றும் கப்பல் என ஒருங்கிணைந்த போக்குவரத்தை ஆங்கிலேயர்கள் காலத்தில் தொடங்கப்பட்டது.

இந்த போக்குவரத்தானது தனுஷ்கோடி – இலங்கை தலைமன்னார் இடையே 24.02.1914-ல் தொடங்கி இரு நாடுகளுக்கும் சென்று வந்தனர். இதற்காக தனுஷ்கோடி, தலை மன்னார் துறைமுகங்களும் அமைக்கப்பட்டன.தனுஷ்கோடியில் இருந்து இலங்கை நாட்டின் தலைமன்னாருக்கு ஒரே பயணச்சீட்டில் கப்பல் பயணம் இருந்து வந்தது. ஆனால் 1964-ம் ஆண்டு புயலில் தனுஷ்கோடி முற்றிலும் நிலைகுலைந்தது. மேலும் இலங்கையில் நடைபெற்று வந்த நிலையில் உள்நாட்டு போரால் கப்பல் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இந்தியா இலங்கை இடையே மீண்டும் போக்குவரத்தை தொடங்குவதற்கு தரைவழிப்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததைத்தொடர்ந்து இந்தியா தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. ஆனால் இதற்கு இலங்கை தரப்பில் ஒத்துழைப்பு இல்லை. எனவே இந்த பாலம் அமைக்கும் பணிகளுக்கான பேச்சுவார்த்தை தடைப்பட்டு வந்தது.

இவ்வாறு இருக்க கொரோனா காலகட்டத்தில் இலங்கை மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை கண்டது. மேலும் இலங்கை அரசு தற்போது இந்திய அரசிடம் தரைவழிப்பாலம் அமைக்க ஒப்புதல் அளித்து பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்நிலையில் தனுஷ்கோடியில் இருந்து இலங்கையின் தலைமன்னார் பகுதிக்கு தரைவழிப்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சாத்திய கூறுகள் அறிக்கை விரைவில் தயாரிக்கப்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த தரைவழிப்பாலம் 23 கிமீ தொலைவில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த தரைவழிப்பாலம் அமைக்க சாத்தியம் இருக்கிறதா என்று பார்த்தால் தனுஷ்கோடியில் இருந்து இலங்கை வரை மொத்தம் 13 மணல் திட்டுகள் உள்ளன. ஒவ்வொன்றும் 1 கிமீ இடைவெளி கொண்டவை ஆகும். இந்த மணல் திட்டுகள் 6 வரை இந்தியாவுக்கு மீதமுள்ளவை இலங்கைகும் சொந்தமானவை. இந்த பகுதி முழுவதும் ஆழம் மிகவும் குறைவானதாகும். இதன் காரணமாக மணல் திட்டுகள் மீது பாலம் அமைக்கப்படலாம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments