மணமேல்குடி அரசு மருத்துவமனை இழுத்து மூடும் போராட்டம் தற்காலிக ஒத்திவைப்பு. சமாதான பேச்சுவார்த்தை கூட்டத்தில் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி





புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாதது குறித்தும் அன்மையில் ஒரு சிறுவன் உயிரிழந்ததுக்கு நடவடிக்கை எடுக்க கோரியும் SDPI கட்சி மணமேல்குடி நகரம் சார்பாக 22.01.2024 மாலை 4 மணிக்கு மருத்துவமனையை இழுத்து மூடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து இன்று 22-01-2024  திங்கட்கிழமை காலை 11 மணியளவில் மணமேல்குடி  வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் புதுக்கோட்டை சுகாதாரப்பணிகள் மற்றும் பராமரிப்பு இணை இயக்குநர், மணமேல்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர், மணமேல்குடி காவல் ஆய்வாளர், மணமேல்குடி சரக வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

SDPI கட்சியின் சார்பில் மாவட்டச் செயலாளர் F. முகமது சாலிஹ்,மாவட்ட பொருளாளர் M.முகமது அஜீஸ்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் இப்ராஹிம், அறந்தாங்கி தெற்கு தொகுதி தலைவர் மைதீன்,மணமேல்குடி நகரத் தலைவர் நவாப், நகர செயலாளர் சாகுல், நஸ்ருதீன், யூசுப் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் SDPI கட்சியின் சார்பில் வைத்த 31 கோரிக்கைகளின் மீதும் 2 மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுப்பதாக புதுக்கோட்டை சுகாதாரப் பணிகள் மற்றும் பராமரிப்பு இணை இயக்குநர் அவர்கள் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் இன்று நடக்க இருந்த இழுத்து மூடும் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவிக்கப்படுகிறது.

மேலும் குறிப்பிட்ட காலத்திற்குள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போராட்டம் நடைபெறும் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments