மீமிசல் கடைவீதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கடைவீதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் கண்ணன் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை தடை செய்து மீண்டும் வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் வெள்ளம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண தொகையை உடனே மத்திய அரசு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments