குளத்தின் நடுவில் உள்ள மின்கம்பத்தை அகற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
மணமேல்குடி அருகே அம்மாபட்டினம் தூங்காளைமேடு குளத்தின் நடுவே சிறிய மணல் திட்டில் உயர்அழுத்த மின் கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. மின்கம்பத்தை அகற்ற தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. இதனால் இக்குளத்தில் குளிக்க கூடிய சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் அச்சத்துடன் குளிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பலத்த காற்று வீசும்போது குளத்தில் குளிக்க பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகிறார்கள். எனவே மின்வாரியமும், மாவட்ட நிர்வாகமும் மாற்றுப்பாதையில் மின்கம்பத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments