புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை தபால் மூலம் வினியோகிக்கப்படும் அதிகாரி தகவல்
புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை தபால் மூலம் வினியோகிக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வாக்காளர் அடையாள அட்டை

தமிழகத்தில் கடந்த 22-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதில் 6,60,574 ஆண்களும், 6,75,969 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 62 பேரும் என மொத்தம் 13,36,605 வாக்காளர்கள் உள்ளனர்.

இறுதி பட்டியல் வெளியான நிலையில் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை தபால் மூலம் அவர்களது வீட்டின் முகவரிக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதேபோல வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தப்பணிக்காக விண்ணப்பித்தவர்களுக்கும் புதிய அடையாள அட்டை தபால் மூலம் வினியோகிக்கப்பட உள்ளது.

வாக்குச்சாவடி அலுவலர்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் புதிதாக 31 ஆயிரத்து 364 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதேபோல திருத்தப்பணிக்காக 8 ஆயிரத்து 797 விண்ணப்ப மனுக்களும் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கான அடையாள அட்டைகள் இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இதற்காக பணிகள் ஒரிரு நாட்களில் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடாக வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமனத்திற்காக ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பெயர் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, கணினியில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 1,559 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments