டி.என்.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., ஆர்.ஆர்.பி. உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி தமிழக அரசு ஏற்பாடு




தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-டி.என்.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., ஆர்.ஆர்.பி. உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு, தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தியாகராய கல்லூரியில் 500 இடங்களுக்கும், சென்னை சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 இடங்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் தேர்வர்கள் குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்.பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள் www.cecc.in வாயிலாக 29-ந்தேதி (நாளை) முதல் பிப்ரவரி 12-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 044-25954905 மற்றும் 044-28510537 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். மார்ச் முதல் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments