சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் புதுக்கோட்டை மீமிசல் மீனவர்கள்




புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க இடங்களும் பழமை வாய்ந்த கோவில்களும் உள்ளன. அதனை தொடர்ந்து புதுக்கோட்டையில் கடற்கரை பகுதிகளும் உள்ளது.அதிலும் கடைக்கோடியில் உள்ள கிழக்கு கடற்கரைச் சாலையையொட்டி அமைந்திருக்கும் இந்த மீமிசல் கடற்கரை மிக முக்கியமான ஒரு கடற்கரை சுற்றுலா தளமாக உள்ளது மேலும் மணமேல்குடி, கோடியக்கரை ,கோட்டைப் பட்டிணம் ஆகிய கடற்கரையும் அமைந்துள்ளது.

அதிலும் மிக முக்கியமான இந்த மீமிசல் பகுதிக்குள் நுழையும் போதே நூற்றுக்கணக்கான நாட்டுப்படகுகள் கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை பார்க்க முடியும். இயற்கைக் காற்றினை சுவாசித்தவாறு தொடர்ந்து சென்றால், கடற்கரையின் ஓரத்தில் அமர்ந்தவாறு மீனவர்கள் வலைகளைப் பிரித்தெடுத்தடுத்தல், படகினைத் தயார்ப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இங்கு அதிகாலையிலிருந்து காலை 10 மணி வரையிலும் மீன்கள் இங்கு விற்பனைக்குக் கிடைக்கின்றன. 

கடற்கரையையொட்டி சுமார் 5 கி.மீ தொலைவிற்குத் தீவு போன்று இயற்கையாகவே அமைந்த அலையாத்திக் காடுகளும் அமைந்திருக்கிறது.

மேலும் மணமேல்குடியைக் கடந்து கோட்டைப்பட்டினம், மீமிசல் வழியாகக் கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாகவே சென்றால் முத்துக்குடா பேருந்து நிறுத்தம் வருகிறது. அங்கிருந்து உள்ளே ஒரு கிலோ மீட்டர் தூரம் கடந்ததும் முத்துக்குடா என்ற அழகிய கடற்கரை கிராமம் நம் கண்ணுக்குத் தென்படுகிறது. முழுவதும் மீனவ கிராமம் தான்.

குறிப்பாக இந்த மீமிசல் கடற்கரையில் கிராமத்தில் உள்ள மீனவர்கள் அனைவரும் கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் தொழிலை செய்து வருகின்றனர். அந்த வகையில் கடலுக்குள் படகு பயணத்திற்கும் இவர்கள் அழைத்து செல்கின்றனர்.

படகுகளில் ஏறி ஒரு குறிப்பிட்ட தூரம் வரை இயற்கை எழில் கொஞ்சும் கடலை ரசித்தவாறு செல்லலாம்.

அதாவது இந்த மீமிசல் அருகில் முத்துக்குடா என்ற சுற்றுலா தளம் தயாராகி வருகிறது. அதனை காண வரும் சுற்றுலா பயணிகளை இந்த மீனவர்கள் தங்களது சொந்த படகில் கடலுக்குள் அழைத்து செல்கின்றனர். இதற்கு கட்டணமாக 200 ரூபாய் முதல் கட்டணமாக பெற்று கொள்கின்றனர். நீங்களும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடலுக்குள் அட்வெஞ்சராக படகு சவாரி செய்யனும்னா இந்த மீமிசல் வந்து என்ஜாய் பண்ணலாம்.










எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments