அறந்தாங்கியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம்




புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர்  முகமது மீரான் தலைமை வகித்தார்.
கிளை தலைவர் தாரிக் இப்ராஹிம், செயலாளர் சலீம், பொருளாளர் ஜமீன், துணை தலைவர் சித்திக், துணைச் செயலாளர் ஹாலித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சமூக பாதுகாப்புத் துறை இளைஞர் நீதிக்குழும உறுப்பினர் ராபியத்துல் பஸரிய்யா மற்றும் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 35 யூனிட்கள் இரத்தம்  கொடையாக வழங்கினார்கள். இரத்தம் வழங்கியவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அறந்தாங்கி அரசு மருத்துவமனை மருத்துவர் ராதாகிருஷ்ணன்   பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். நன்றியுரை மாவட்ட மருத்துவரணிச் செயலாளர் சபியுல்லாஹ் கூறினார். இம்முகாமில் கலந்து கொண்டு இரத்தம் கொடையாக வழங்கியவர்களுக்கும், அறந்தாங்கி அரசு மருத்துவமனை இரத்தவங்கி மருத்துவர் ராதாகிருஷ்ணன் மற்றும் மருத்துவ குழுவிற்கும் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களுக்கும் தவ்ஹீத் ஜமாஅத் நன்றியை தெரிவித்துக்கொண்டார்கள்.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments