மணமேல்குடி ஒன்றியத்தில் இருந்து அரசுப் பள்ளியில் படிக்கும் +2 வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் ஆர்வமூட்டல் செயல்பாடாக களப் பயணம் அறந்தாங்கி கல்லநேந்தல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு அழைத்து சென்றனர்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் இந்த கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உயர் கல்வி பயில ஆர்வம் ஊட்டும் செயல்பாடாக மாணவர்களை அறந்தாங்கி கல்லநேந்தல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு களப்பயணமாக அழைத்துச் செல்லப்பட்டது.
இந் நிகழ்வில் கல்லூரி முதல்வர் பொறுப்பு பேராசிரியர் பாலமுருகன் அவர்கள் களப்பயணத்தினை தொடங்கி வைத்தார்.
நாட்டு நலப்பணி திட்ட அலுவலக அலகு 1 பழனித் துறை அலகு 2 முனைவர் ரமேஷ் ரெட்ரில் கிளாஸ் ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில்குமார் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் மாணவிகள் அனைவரையும் வரவேற்றார்கள்.
இந்நிகழ்வில் துறைவாரியாக பாடப்பிரிவுகளை குறித்த விளக்கங்கள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.
அதேபோல் நூலக பயன்பாடு குறித்து விளக்கம் தெரிவிக்கப்பட்டது.
உயர்கல்வி செல்வதற்கு மாணவர்கள் விண்ணப்பங்களை சரியான நேரத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் மணமேல்குடி ஒன்றியத்தில் இருந்து 187 மாணவர்கள் களப்பயணத்தில் பங்கேற்றனர் மாணவர்கள் இக்களப்பயணத்தில் ஆர்வமாக பாடப்பிரிவுகளையும் கேட்டு அறிந்தனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.