சென்னைக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்களுக்கு வசதியாகவும் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. இந்நிலையில், இந்த பேருந்து முனையத்தில் எந்தெந்த நடைமேடையிலிருந்து எந்தெந்த ஊருக்கு பேருந்துகள் புறப்படும்? என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சென்னைக்கு வரும் புலம் பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. எனவே சென்னை பெருநகரத்தின் மக்கள் தொகை 1 கோடியை கடந்திருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் தென் மாவட்டங்களிலிருந்து வருகின்றனர். அதேபோல விழா நாட்களில், பண்டிகை தினங்களில் இம்மக்கள் பெரிய அளவில் சொந்த ஊரை நோக்கி படையெடுக்கின்றனர்.
ஆனால் இவர்களுக்கான முறையான போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்படவில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. தாம்பரம், திருவான்மியூர் போன்ற புறநகர் பகுதிகளில் தென் மாவட்டங்களுக்கு செல்ல பேருந்துகள் இயக்கப்பட்டாலும், அவை குறைந்த எண்ணிக்கையில்தான் இயக்கப்படுகின்றன. எப்படி இருந்தாலும் கோயம்பேடு வந்தால்தான் பஸ் கிடைக்கும் என்கிற சூழல் இருக்கிறது. அப்படியே கோயம்பேடு வந்து பஸ் புடிச்சாலும் பெருங்களத்தூரை தாண்டுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது.
இந்த பிரச்னையை சமாளிக்கதான் வண்டலூரையடுத்த கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையத்தை கட்டுவது என்று கடந்த அதிமுக ஆட்சியில் முடிவெடுக்கப்பட்டது. இதன்படி 88 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி ரூ.400 கோடியில் கடந்த 2019ம் ஆண்டு பேருந்து நிலையம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. இவை முடியும்போது திட்டமிட்டதைவிட கூடுதலாக 25 சதவிகிதம் செலவை இழுத்தன. இருப்பினும் ஒரு வழியாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு இந்த ஆண்டு பொங்கலை ஒட்டி அது பயன்பாட்டுக்கு வந்தது.
இப்பேருந்து முனையத்தில் 2,000க்கும் அதிகமான பேருந்துகள் வரை வந்து செல்லும், இது தவிர 270 கார்கள், 3,500 பைக்குகள் பார்க் செய்துகொள்ளலாம். முதற்கட்டமாக தென் மாவட்டங்களுக்கு அதிக அளவிலும், மத்திய மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு குறைவான அளவில் பேருந்துகளும் இயக்கப்படும். அதன் பின்னர் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்து மட்டுமே இயக்கப்படுகின்றன. ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்திற்கே மாற்றப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் எந்த நடைமேடையிலிருந்து எந்த ஊருக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி,
நடைமேடை 1 மற்றும் 2ல் - கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருச்செந்தூர், சிவகாசி, செங்கோட்டை, குட்டம், குலசேகரம், திசையன்விளை, உடன்குடி, கருங்கல் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
நடைமேடை 3ல் - ராமேஸ்வரம், சிவகங்கை, காரைக்குடி, கீரமங்கலம், சாயல்குடி, ஏர்வாடி, ஒப்பிலான், கமுதி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் புறப்படும்.
நடைமேடை 4 மற்றும் 5ல் - திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், அரியலூர், ஒரத்தநாடு, கரூர், திண்டுக்கல், குமுளி, கம்பம்
நடைமேடை 6ல் - ஈரோடு, கோவை, சேலம், ஊட்டி, குருவாயூர், எர்ணாகுளம், கரூர், திருப்பூர்
நடைமேடை 7ல் - திருவண்ணாமலை, செஞ்சி, செங்கம்
நடைமேடை 8ல் - அரியலூர், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், திண்டிவனம், திருக்கோவிலூர்
நடைமேடை 9ல் - கடலூர், திட்டக்குடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய ஊர்களுக்கு பேருந்துகள் புறப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.