தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் இன்று முதல் பிப். 2-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையஇயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று (ஜன.31) தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். உள்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டத்துக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு அல்லது அதிகாலை நேரத்தில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.


தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் பிப். 1, 2-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். பிப்.3 முதல் 5-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னையில் மேகமூட்டம்: சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 86-87.8 டிகிரி பாரன்ஹீட், குறைந்தபட்ச வெப்பநிலை 73.4-75.2 டிகிரிபாரன்ஹீட் அளவில் இருக்கும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments