அதிராம்பட்டினம் அலையாத்திக்காடு பகுதிகளில் பறவைகளை வேட்டையாடினால் சிறை தண்டனை வனத்துறை எச்சரிக்கை
அதிராம்பட்டினம் அலையாத்திக்காடு பகுதிகளில் பறவைகளை வேட்டையாடினால் சிறை தண்டனை விதிக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அலையாத்திக்காடுகள்

அதிராம்பட்டினம் பகுதியில் அடர்ந்த அலையாத்திக்காடுகள் உள்ளன. இந்த காட்டில் காட்டுப்பன்றி,பாம்பு, முயல் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன. மேலும் ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் இந்த அலையாத்திக்காட்டிற்கு ஆஸ்திரேலியா, ரஷியா, ஜப்பான், இந்தோனேஷியா, மலேசியா, மியான்மா், இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து பூநாரை, கூளக்கிடா, செங்கால் நாரை, சாம்பல் நாரை, பாம்புதாரா, வெள்ளை அறிவாள் மூக்கன், கருப்பு அரிவாள், மூக்கன், நீர்காகங்கள், உள்ளான் என பலவகை நீர் பறவைகள் வந்து செல்கின்றன.

வேட்டையாடினால் சிறைத்தண்டனை

இந்த நிலையில் தற்போது அலையாத்திக்காடு பகுதியில் உள்ள நீர்நிலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் இந்த ஆண்டு பல்வேறு நாடுகளில் இருந்து வெளிநாட்டு பறவைகள் இங்கு வந்து குவிந்துள்ளன.இந்த ஆண்டு இமயமலைப் பகுதியில் இருந்து நீர்ப்பறவைகள் அதிக அளவில் வந்துள்ளன.

இந்த பறவைகளை பாதுகாக்க வனத்துறையினர் ேராந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பறவைகளை வேட்டையாடக்கூடாது என்றும், இதை மீறி வேட்டையாடினால் சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும் வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments