பாம்பன் ரயில் பாலம் சென்னை எழும்பூர் - இராமேஸ்வரம் போட் மெயில்‌ ரயில்இன்று (பிப்ரவரி 24) 110வது வயதில் அடியெடுத்து வைக்கிறது!






சென்னை எழும்பூர்-ராமேஸ்வரம் இடையே புதுக்கோட்டை வழியாக செல்லும் போட்மைல் ரயில் இன்று(24/02/2024) பிறந்தநாள் காண்கிறது.







கடந்த 1914 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி சென்னை எழும்பூர்- கொழும்பு இடையே போட்மெயில்(Boatmail) ரயில் தொடங்கிவைக்கப்பட்டது. சென்னை எழும்பூர்-தனுஷ்கோடி வரை ரயிலிலும், தனுஷ்கோடி-தலைமன்னார் வரை படகிலும் பிறகு தலைமன்னார்-கொழும்பு வரை ரயிலிலும் இயங்கிவந்துள்ளது. பகுதி ரயில் பகுதி படகில் பயணிப்பதாலேயே இந்த ரயிலுக்கு போட்மெயில்(Boatmail) என்று பெயர் வந்தது. மேலும் இந்தியாவையும் சிலோனையும் இணைத்தால் இந்த ரயில் 'இந்தோ-சிலோன் போட்மெயில்' என்றே அன்றைய காலகட்டத்தில் மக்களால் அழைக்கப்பட்டது. சென்னையிலிருந்து சிலோனுக்கு வெறும் ₹80/- ரூபாய் கட்டணத்தில் அன்றைய மக்கள் இந்த ரயிலில் பணித்துள்ளனர்.  இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஏறக்குறைய 50 ஆண்டுகள் வரை இந்தியா/இலங்கை மக்கள் இந்த ரயிலை பயன்படுத்தி வந்தாக வரலாறு கூறுகிறது. 




தனுஷ்கோடி புயல்!

22 டிசம்பர் 1964 ஆம் ஆண்டு தனுக்கோடியை தாக்கிய புயலின் போது 100 க்கு மேற்பட்ட பயணிகளுடன் பாம்பனிலிருந்து புறப்பட்ட பாம்பன்-தனுஷ்கோடி பயணிகள் ரயில் புயலில்  சிக்கியது. பல ரயில் பெட்டிகள் கடலில் மூழ்கின. அதன் பிறகு தனுஷ்கோடி-ராமேஸ்வரம் பாதை துண்டிக்கப்பட்டது. 

அதிலிருந்து  போட்மெயில் ரயில் ராமேஸ்வரம் வரை மட்டுமே இயக்கப்பட்டுவருகிறது.

மீண்டும் தனுஷ்கோடி!

தனுஷ்கோடி-ராமேஸ்வரம்(17.5கிமீ) இடையே மீண்டும் ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்த பாதை அமைக்கப்பட்டபின் போட்மெயில் ரயில் தனது பழைய நிலைக்கு திரும்பும் என்று நம்பப்படுகிறது.




இன்று 110-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாம்பன் ரெயில் பாலம்

புதிய பாலம் செயல்பாட்டுக்கு வர இருப்பதால் சில மாதங்களில் நிரந்தரமாக விடைபெறுகிறது

ஆண்டுகள் மீட்டர்கேஜ் ரெயில்கள்தான் பாம்பன் ரெயில் பாலத்தை கடந்து சென்றன.

ராமேசுவரம். பிப். 24- ஆங்கிலேயர்களால் வர்த்தக நோக்கத்திற்காக பாம்பன் கடலில் ரெயில் பாலம் கட் டப்பட்டது. பாலம் கட்டு மான பணி கடந்த 1902-ம் ஆண்டு தொடங்கியது. கட லுக்குள் கம்பீரமாக 146தூண் களும் அவற்றின் மீது 145 கர்டர்களும் பொருத்தி தண்டவாளங்கள் அமைத்து ரெயில் பாலத்தை ஒருபுறம் இருந்து மறுபுறம் கப்பல்கள் ரெயில் பாலத்தின் வழியாக கடந்து மையப்பகுதி தூக்குப்பாலத்தையும் அமைத்தார்கள். இதற்கான பணிகளை ஆங்கிலேய பொறியாளர் ஷெர்சர் கடந்த 1913-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி வைத்தார். அதே ஆண்டு டிசம்பர் மாதம் தூக்குப்பா லத்தின் பணிகள் முழுமை யாக முடிவடைந்தன.

பாம்பன் ரெயில் பாலத் தில் 1914-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி முதல் ரெயில் போக்குவரத்து தொடங்கியது. போக்குவ ரத்து தொடங்கப்பட்டு பின்னர் அகல ரெயில் பாதையாக மாற்றுவதற்கு கடந்த 2006-ம் ஆண்டு பாம் பன் ரெயில் பாலத்தில் ரெயில் போக்குவரத்து நிறுத் தப்பட்டது. இந்த பணிகள் 2007-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் நிறைவு பெற்றது. பின்னர் அகல ரெயில் ரெயில்களும் ஓட தொடங்கியது. பாம்பன் ரெயில் பாலம் தனது ரெயில் சேவையை தொடங்கி இன் றுடன் 109 ஆண்டுகளை நிறைவு செய்து 110-வது ஆண் டில் அடி எடுத்து வைக்கிறது. இந்திய அளவில் உள்ள மிகமுக்கிய நினைவு சின்னங் கள் மற்றும் அடையாளங் களில் ஒன்றாக விளங்கும் பாம்பன் பாலம் வழியாக கடந்த 2022-ம் ஆண்டு டிசம் பர் 23-ந் தேதி இரவு ரெயில் ஒன்று சென்றபோது தூக்குப் பாலத்தில் அதிர்வுகள் இருப் பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக

கடந்த 14 மாதமாக பாம்பன் ரெயில் பாலத்தில் பயணிகள் ரெயில் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. இத னால் அனைத்து ரெயில் களும் ராமநாதபுரம், மண்ட பம் வரை மட்டுமே இயக் கப்படுகின்றன.

இதனிடையே கடந்த 109 ஆண்டுகளுக்கு மேலாக சேவையை வழங்கி வந்த பாம்பன் ரெயில்பாலம் இந்த ஆண்டுடன் நிரந்தரமாகவே அகற்றப்பட்டு விடைபெறு கிறது. ஏனென்றால் இந்த பாலம் மிகவும் பழமை ஆகி விட்டதால் இதன் அருகி லேயே வடக்கு கடல் பகுதி யில் ரூ.545 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக

நடந்து வருகிறது. விரைவில் புதிய ரெயில் பாலம் திறக்கப்பட்டு ரெயில் போக்குவரத்தும் தொடங்கப் பட உள்ளது.அதனால் இந்த ஆண்டுடன் ரெயில் போக் குவரத்தில் பல் வேறு சாதனை படைத்த பாம்பன் ரெயில் பாலம் நிரந்தரமாக விடைபெற உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments