கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற தமிழ் கூடல் நிகழ்ச்சி
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கிடையே தமிழ்மொழியின் தொன்மை, இலக்கண இலக்கியங்கள் மீது பற்றும் ஆர்வமும் ஏற்படுத்தும் வகையிலும்  தமிழுக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்களைப் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகளில் தமிழ் கூடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன அதன் ஒரு பகுதியாக கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மூன்று தமிழ் கூடல் நிகழ்வு நடைபெற்றது. பள்ளியின் தலைமையாசிரியர் முன்னிலையில் சிறந்த தமிழ் ஆசிரியர்கள் அமரடக்கி பள்ளி தமிழ் ஆசிரியர்,கோட்டைப்பட்டிணம் தலைமையாசிரியர்,மீமிசல் தமிழ் ஆசிரியர் அவர்களை கொண்டு அன்றைய தினங்களில் சிறந்த  சொற்பொழிவுகள், கலந்துரையாடல்கள் நடைப்பெற்றன. 

இன்று  31.01.2024 புதன்கிழமை மூன்றாவது  தமிழ் கூடல் நிகழ்வு நடைபெற்றது
பள்ளியின் சிறப்பு அழைப்பாளராக கோட்டை பட்டினம் தலைமையாசிரியர் அவர்களும் கோபாலப்பட்டிணம் அரசு பள்ளியில் பயின்று தற்போது தமிழ் இலக்கியத்துறையில் பட்டம் பெற்ற சிறந்த பேச்சாளர் நவின் குமார் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்  பள்ளியின் ஆங்கில ஆசிரியர் திரு. அ. சிவராஜ் அவர்கள் நன்றி கூற விழா இனிதே முடிவுற்றது சிறப்பு விருந்தினர் அவர்களுக்கு பள்ளியின் சார்பாக பொன்னாடை போற்றி கொளரவிக்கப்பட்டார்கள் இந்த பள்ளியில் பயின்று  இந்த பள்ளிக்கே சிறப்பு அழைப்பாளராக திரு.நவீன்குமார் கலந்து கொண்டார். 

மாணவர்களின் மாறுவேட போட்டிகள் காந்தியடிகள், பாரதியார், பாரதிதாசன், ஒளவையார் போன்றோர்கள் மாணவர்கள் வேடமணிந்து பேசினார்கள்

மாணவர்களிடம் புதைந்துள்ள கதை, கட்டுரை, பேச்சுப்போட்டி, பட்டிமன்றம், கேள்வி பதில் நிகழ்ச்சி மாணவர்களின் திறனை வெளிக்காட்டும் வகையில் போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments