கரைப்பகுதியில் மீன் பிடித்ததாக கூறி 3 விசைப்படகுகளை சிறைபிடித்த நாட்டுப்படகு மீனவர்கள்
கரைப்பகுதியில் மீன் பிடித்ததாக கூறி 3 விசைப்படகுகளை நாட்டுப்படகு மீனவர்கள் சிறைபிடித்தனர்.

நாட்டுப்படகு மீனவர்கள் பாதிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. அதேபோல் இந்த பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான நாட்டுப்படகுகளும் உள்ளன. இவர்கள் தினந்தோறும் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம்.

இந்நிலையில் மீன் பிடித்தல் சம்பந்தமாக நாட்டு படகிற்கும், விசைப்படகிற்கும் தனித்தனியே விதி உள்ளது. 5 நாட்டிக்கல் தூரத்திற்கு அப்பால் தான் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டும் என்று விதி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் விசைப்படகு மீனவர்கள் 5 நாட்டிக்கல் குறைவான பகுதிகளிலேயே மீன்பிடிப்பதாக நாட்டு படகு மீனவர்கள் தொடர்ந்து குற்றம் சாற்றி வருகின்றனர். இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் மிகவும் பாதிப்படைகின்றனர் என்றும் கூறி வருகின்றனர்.

விசைப்படகுகள் சிறைபிடிப்பு

இந்நிலையில் நேற்று கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த 3 விசைப்படகுகள் கரைப்பகுதியில் மீன் பிடித்ததாக கூறி 3 விசைப்படகுகளை அப்பகுதியை சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்கள் சிறைபிடித்து சென்றனர்.

இந்த சம்பவம் அறிந்த கடலோர காவல் குழுமத்தினர் மற்றும் மீன்வளத்துறையினர் சம்பவம் இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 3 விசைப்படகுகளை நாட்டுப்படகு மீனவர்கள் சிறைபிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments