கோபாலப்பட்டிணத்தில் மில் ரோடு சாலையில் புதிய சிறு பாலம் அமைக்கும் பணிகள் தீவிரம்
கோபாலப்பட்டிணத்தில் மில் ரோடு சாலையில் புதிய சிறு பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது 

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா, நாட்டாணி புரசக்குடி ஊராட்சி, மீமிசல் அருகே கோபாலப்பட்டிணத்தில் மீமிசல்-கோபாலப்பட்டிணத்தை இணைக்கும் முக்கிய சாலையாக காவல் நிலையம் எதிரில் அமைந்துள்ள காட்டுக்குளம் சாலை, மில் சாலை (SBI வங்கி) மற்றும் அவுலியா நகர் சாலை இருந்து வருகிறது.

இதில் முக்கிய போக்குவரத்து மிகுந்த சாலையையாக மில் சாலை (SBI வங்கி) இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த சாலையானது மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக இருந்து வந்த நிலையில் கடந்த 06.07.2023 அன்று முதலமைச்சர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் ரூ.70 லட்ச மதிப்பீட்டில் காட்டுகுளம் சாலை மற்றும் SBI சாலை என இரண்டு சாலைகளை புதிதாக தார் சாலை அமைப்பதற்காக அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ST.ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார். 
 
இந்நிலையில் 02.01.2024 செவ்வாய்க்கிழமை கோபாலப்பட்டிணம்-மீமிசல் இணைக்கும் மில் சாலை (SBI வங்கி)-கடற்கரை சாலையில் பல வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட சிறு பாலத்தை அகற்றி புதிய பாலம் அமைக்கும் பணிக்கான வேலை ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்தது

தற்போது கான்கிரீட் கலவை அமைத்து பாலம் வேலை நடைபெற்று வருகிறது 

சிறு பாலம் அமைக்கப்பட்டு விரைவில் புதிய தார் சாலை அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments