பட்டுக்கோட்டை மக்களின் நீண்ட நாள் கனவு... பட்டுக்கோட்டை - மதுக்கூர் - மன்னார்குடி பட்டுக்கோட்டை - ஒரத்தநாடு - தஞ்சாவூர் புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு சேர்த்து மொத்தமாக ரூ.161 கோடி ஒதுக்கீடு.
பட்டுக்கோட்டை - மதுக்கூர் - மன்னார்குடி , பட்டுக்கோட்டை - ஒரத்தநாடு - தஞ்சாவூர் புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு சேர்த்து மொத்தமாக ரூ.161 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 

ஆங்கிலேயர் காலத்தில் இருந்து அரியலூர் தஞ்சாவூர் பட்டுக்கோட்டை புதிய ரயில் பாதை அமைக்கப்பட்ட வேண்டும் என்ற 92 ஆண்டு காலகோரிக்கை நிறைவேறாத கோரிக்கையாக இருந்து வந்தது. ஒவ்வொரு ஆண்டும்  மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் புதிய ரயில் பாதை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அரியலூர் தஞ்சாவூர் பட்டுக்கோட்டை பகுதி மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்து வந்தனர்.

ரயில் பயணிகள், வர்த்தகர்கள், அலுவலர்கள், தன்னார்வ அமைப்புகள், பொதுமக்கள் தொடர்ந்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள். அதிரை மக்களும் தொடர்ந்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில்  மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகும் வகையில் மன்னார்குடி - பட்டுக்கோட்டை, பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு ரூ.161 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

2024-25 ரயில்வே இடைக்கால பட்ஜெட் புதிய ரயில் பாதைகளுக்கு

காரைக்கால் துறைமுகத்தை பேரளத்தோடு சேர்க்க 10 கோடி,  அத்திபட்டு - புத்தூர் (88.30) 50 கோடி,  கூடுவாஞ்சேரி - ஆவடி  (60) 25 கோடி,  மொரப்பூர் - தர்மபுரி (36) 115 கோடி , சென்னை - மகாபலிபுரம் - பாண்டி- சென்னை (178.28கீமி) 25 கோடி, ஈரோடு - காங்கேயம் - பழனி(91.05) 100.01 கோடி, மதுரை - அருப்புக்கோட்டை - தூத்துக்குடி (143.5) 100.01 கோடி , திண்டிவனம் - நகரி(   179.2 )    350 கோடி,          கோடி , திண்டிவணம் - செஞ்சி (70)  100.1 கோடி, 
  , மன்னார்குடி- பட்டுக்கோட்டை மற்றும் தஞ்சை - பட்டுக்கோட்டை (47.2) க்கு 161 கோடி, நாகை - திருக்குவளை - எட்டுக்குடி - திருத்துறைப்பூண்டி சுமார் ( 36 ) மற்றும் காரைக்கால் - பேரளம் (23) 150 கோடி.  

மேலும் திருவாருர் - காரைக்குடி(148)  திருத்துறைப்பூண்டி - வேதை- அகஸ்தியம்பள்ளி (37) மற்றும் காரைக்கால் - பேரளம் (23) மின்மயமாக்கலுக்கு தேவையான நிதி ஒதுக்கபட்டதால் 2024-25 ல் பணிகள் நிறைவடையும் என தெரிகிறது.  இத்துடன் 100% தமிழ்நாடு ரயில்பாதைகள் மின்மயமாக்கல் முடிவடையும்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments