புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 38 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க திட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 38 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சம்பா அறுவடை

புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா நெல் 2 லட்சத்து 2 ஆயிரத்து 401 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து சம்பா நெல் அறுவடை தொடங்கியது. பொங்கலுக்கு பின் இந்த அறுவடை தற்போது மும்முரமாக நடைபெற்றது. விவசாயிகள் தங்களது வயல்களில் சாகுபடி செய்த நெற்பயிர்களை அறுவடை எந்திரங்கள் மூலமும், தொழிலாளர்கள் மூலமும் அறுவடை செய்கின்றனா்.

கொள்முதல் நிலையங்கள்

அறுவடை தீவிரமடைந்ததால் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்வதற்காக அரசு தரப்பில் இருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் முதற்கட்டமாக மாவட்டத்தில் 114 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் அடுத்தடுத்து அறுவடை அதிகரித்துள்ளதால் நெல் கொள்முதல் நிலையங்களை கூடுதலாக திறக்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதையடுத்து மேலும் 38 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஒப்புதல் கிடைத்ததும் திறக்கப்பட உள்ளது. இதன்மூலம் விவசாயிகள் தங்கள் அருகாமையில் உள்ள கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்கலாம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments